பக்கம்:எச்சில் இரவு.pdf/42

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

இந்தமலர் தங்கச் சிவந்தியா? என்றுதான் கேட்டேன்’ என்று கூறினன் அவன். அதைக் கேட்டவுடனே அவள், "அத்தான் நீங்கள் ஒரு கல்விக் கிரகம்" என்று கூறினாள். "என்ன! நான் கல் விக்கிரகமா?’ என்று வியப்புடன் கேட்டான். "நீங்கள் கல் விக்கிரகம் அல்ல, கல்விக் கிரகம், அதாவது, கல்விக் கிருப்பிடம்” என்றாள். கரும்பின் பக்கத்திலே நெற்கதிரும், கவரிமான் பக்கத்திலே கலைமானும், வளையலின் பக்கத்திலே ஒரு வைர மோதிரமும், வல்லினத்தின் பக்கத்திலே மெல்லினமும். கவிதையின் பக்கத்திலே ஒர் இலக்கியக் கட்டுரையும் இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி அவர்கள் இருவரும், அப்போது நெருங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வஞ்சியின் முகத்தைப் பார்த்துவிட்டு, அந்த வான் நிலவை அவன் பார்த்தான். அவளுடைய அழகான விழிகளைப் பார்த்துவிட்டு, ஆற்று மீன்களை அவன் பார்த்தான். அவள் அவனுடைய திரண்ட தோள்களைப் பார்த்துவிட்டு, குன்றுகளையும் மலைகளையும் கூர்ந்து பார்த்தாள். கொப்புளம் கொண்ட குளிர்ந்த வானத்தில், அப்போது ஊமைநிலா ஊர்ந்து கொண்டிருக்தது. புலால் நாற்றமில்லாத விண்மீன்கள், கருநீல வானத்தில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. அவனும் அவளும் தங்கள் கண் வெளிச்சத்தை அந்த விண்வெளிச்சசத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/42&oldid=1405349" இலிருந்து மீள்விக்கப்பட்டது