பக்கம்:எச்சில் இரவு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


ருக்கையில் திடீரென்று கங்கை நதி பெருக்கெடுத்து அவர்கள் இருவரையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டதாம்' என்று கூறினன் அவன். அத்துயரச் செய்தியைக் கேட்ட பூங்கோதை, -

- "ஐயோ! பாவம். அந்த இளங்காதலர்களின் முடிவு இப்படியா ஆகவேண்டும்? மன்னர்களும் மகாகவிகளும் காலமாவதற்குக் காரணமாக இருக்கும் அக் கங்கை கதிக்கு அந்த மொகலாயச் சக்ரவர்த்தி மரண தண்டனை அல்லவா விதித்திருக்க வேண்டும்?' என்ருள் அவள். '

மற்ருெருவனேக் கொன்றவனுக்கு மரண தண் டனே விதிக்கலாம். மலைக்கும் மடுவுக்கும், ஆற்றுக்கும் காற்றுக்குமா மரண தன்டனை விதிக்க முடியும்' என்ருன் அவன். - -

'ஏன் விதிக்க முடியாது? அக்காலத்து மன்னன் ஒருவன் ஆற்றுக்கு மரண தண்டனை விதித்திருக் கிருனே!’ என்ருள் அவள். -

'அப்படியா? என்ருன் அவன். "ஆமாம்! பாரசீக மன்னன் ஒருவன் ஒரு சமயம் தன் குதிரை மீது ஏறி ஆற்றைக் கடந்த போது, அவன் குதிரையை அந்த ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டதாம். அடங்காத கோபங் கொண்ட அம்மன்னன் அவ்வாற்றுக்கு மரண தண்டனை விதித்தானும்! எப்படித் தெரியுமா? ஏராள மான கால்வாய்களே வெட்டி, ஆற்று நீரை வடித்து விட்டாம்ை. அந்த ஆறு, நீர் இல்லாமல் செத்து விட்ட தாம்!” என்ருள் அவள். அச்செய்தியைக் கேட்டதும் அவன் அவளைப் பார்த்து, - . . . . . .”

விசித்திரமான வேந்தன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/47&oldid=1001262" இலிருந்து மீள்விக்கப்பட்டது