பக்கம்:எச்சில் இரவு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


என்பவன் பரிவாதி என்னும் பெயர் கொண்ட வினையை மீட்டுவதுபோல் தீட்டப்பெற்ற வண்ண ஒவியம் ஒன்று சுவரில் மாட்டப் பெற்றிருந்தது. கூடத் துக்கு வந்த இருவரும் வீணை இருந்த கட்டிலின்மீது உட்கார்ந்தனர்.

ஊசி என்பவள் தங்கத்தைப் பார்த்து, ஏண்டி தங்கம், இதோ எரியும் இந்த விளக்கு, குத்துவிளக்கா அல்லது குத்தும் விளக்கா?’ என்று கேட்டாள்.

'இது குத்தும் விளக்கல்ல, குத்தும் விளக்காக இருந்தால் கான் இதை விலை கொடுத்து வாங்கி யிருப்பேன?’ என்ருள் தங்கம்.

"குத்துவிளக்குகளை நாம் விலை கொடுத்து வாங்கு கிருேம். நம்மைக் குத்தும் விளக்குகளோ கம்மை விலை கொடுத்து வாங்குகின்றன’’ என்ருள் ஊசி.

அப்போது, எலி ஒன்று குத்துவிளக்கிலுள்ள எண் ணெயில் தன் வாலேத் தோய்த்துத் தன் வாலிலுள்ள எண்ணெயை கக்கிக் கொண்டிருந்தது. அதனேக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஊசி என்பவள் தங்கத்தைப் பார்த்து, 'தங்கம் அக்த எலியைப் பாரடி! அது, அந்தக் குத்துவிளக்கிலுள்ள எண்ணெயை கக்காமல், தனது நீண்ட வாலே எண்ணெயில் தோய்த்து, அந்த எண்ணெயை கக்குகிறதே அது ஏன்?’ என்று கேட்டாள்.

'ஏனெனில் அந்த எண்ணெய்தான் எலியின் உடம்பில் காமரசத்தை வளர்க்கிறது. இவ்வாறு எண்ணெயில் தோய்ப்பதற்கு எளிதாக இருக்கும் பொருட்டே எலியின் வால் மிகவும் நீளமாகப் படைக்கப் பட்டிருக்கிறது” என்ருள் தங்கம். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/58&oldid=1001314" இலிருந்து மீள்விக்கப்பட்டது