பக்கம்:எச்சில் இரவு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


என்று, மன்னனையே எதிர்த்துக் கேள்வி கேட்டவன் அந்த மகாகவி" என்றான் அவன்.

"கம்பன் ஒரு மகாகவி என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் அவன், ஒழுக்கத்தைப் பற்றி ஊருக் கெல்லாம் உபதேசம் செய்தானே, அவன் ஒழுக்கத் தோடு வாழ்ந்தானா? ஆஸ்தான கவிஞனுக்குரிய அந்தஸ்தை அவன் காப்பாற்றினானா? இல்லையே! அவனை ஆதரித்து வந்த சடையப்ப வள்ளலோ அடிக்கடி கரும்புகளைத் தொட்டு வந்தவன். நெம்புகோல் கம்பனா, பெண்களின் குரும்பைகளைத் தொட்டு வந்தவன். அன்றாடம் அவன் குத்தகை முத்தம் கொடுத்து வந்தவன். மயிலாப்பூரில் வாழ்ந்த திருவாலி என்னும் வள்ளலைப் புகழ்ந்து பாடி, அவன் வழங்கிய பரிசில் பனத்தைக் கொண்டு, தாசி வல்லியின் அங்கத்தில் தங்க நகைகளே அணிவித்து, அன்றாடம் அவள் மடியில் அடைகாத்துக் கிடந்தவன் அலலவா அவன். அவன் ஒருநாள் தாசிப்பெண் ஒருத்தியை இழுத்துக் கொண்டு ஒடிவிட்டாகனாம். ஒரு குளத்திலுள்ள நீரை ஒரு குடத்தில் எடுத்துக்கொண்டு போகமுடியுமேயன்றி அந்தக் குளத்தையே யாரும் எடுத்துக்கொண்டு போக முடியாது. அதுபோல், இங்கு வரும் இளைஞர்கள் என் மகளேப் பஞ்சணையில் அழுத்திக் கொண்டிருக்க முடியு மேயன்றி, அந்தக் கம்பனைப்போல் யாரும் அவளே இழுத்துக்கொண்டு போய்விட முடியாது. வேண்டு மானால், அவளுடைய செவ்விதழ்களில் இருக்கும் செந் தேனை எடுத்துக் கொண்டு போகலாம்" என்றாள் தாய்க்கிழவி.

"நான் இங்கு அதற்காகத்தான் வந்திருக்கிறேன்" என்றான் கவிஞன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/62&oldid=1317536" இலிருந்து மீள்விக்கப்பட்டது