பக்கம்:எச்சில் இரவு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


"ஐந்து பொன் கொடுத்தால் நீங்கள் அங்கேபோய்த் தேனெடுக்கலாம்" என்றாள் கிழவி.

"நான் ஒரு கால்நடைக் கவிஞன். என் கையில் காசில்லை. என்னிடம் அற்புதமான கற்பனைதான் இருக்கிறது" என்றான் கவிஞன்.

"பொய் விரிக்கும் இவ்விடத்தில் வெறும் கைவிரிக்கும் கவிஞரே! தங்களிடம் கற்பனை தான் இருக்கிறதா? கற்பனை என்பது என்ன தெரியுமா? அது, உருப்படாத கவிஞர்கள் செய்யும் ஓயாத முயற்சி. கலவி என்பது, பணம் கொடுப்பவர்களுக்கு தாசிகள் தரும் பயிற்சி. நீங்கள் முன்பணம் கொடுத்தால் அந்த முன் படத்தைப் பார்க்கலாம். இல்லையென்றால் இப்போதே இவ்விடத்தை விட்டு நீங்கள் எழுந்து போகலாம்" என்றாள் தாய்க்கிழவி.

எதிர்பார்த்து வந்த கவிஞன், ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்திறகுப் பிறகு, ஒர் இளைஞன் அங்கே வந்து, தாய்க் கிழவியை முதலில் சந்தித்தான். தங்கத்தைப் பிறகு சந்தித்தான்.

தாய்க்கிழவி, விளக்கை எடுத்துக்கொண்டு ஓரிடத்திற்குச் சென்றாள். தங்கமும் அவனும் வேறிடத்திற்குச் சென்றனர்.

ஆலிங்கனத்திற்கு உரிய இடம் அந்த இடம்.

அணைப்பதற்கும் இணைப்பதற்கும் உரிய அறை அந்த அறை.

அக்த அறையின் சுவரொன்றில், வசி+சிவ என்றும்; வ+சி+வ என்றும் எழுதப் பெற்றிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/63&oldid=1317638" இலிருந்து மீள்விக்கப்பட்டது