பக்கம்:எச்சில் இரவு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


அவனுக்கு அது-நீண்டநாள் ஆசை, நேர்முகத் தேர்வு.

உரையாடலும், பாடல்களும் இல்லாமல் அந்த ஊமை நாடகம் நன்கு நடைபெற்று முடிந்தது.

அவள் அவனைப் பார்த்து "உங்கள் புதிய நாடகத்திற்குப் பெயர் வைக்க மறந்துவிட்டீர்களே?" என்று கேட்டாள்.

"நான் இதை மறந்து விடவில்லை. பிள்ளை பிறந்த பிறகுதானே அதற்கு நாம் பெயரிடுகிறோம். இங்கு நடைபெற்ற நாடகத்திற்கு இனிமேல்தான் ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும்" என்றான் அவன்.

"இரண்டு பேர் மட்டுமே பார்க்கக் கூடிய இந்த நாடகத்திற்கு என்ன பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும்" என்று அவள் கேட்டாள்.

"இந்த நாடகத்திற்குப் 'பிரபுலிங்கலீலை' என்று பெயரிடுவதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றான் அவன்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், தாம் இயற்றிய நூலொன்றுக்குப் பிரபுலிங்கலீலை என்று பெயரிட்டிருக்கிறாள். நீங்களோ, பிறரறியாமல் நடத்தும் இந்த நாடகத்திறகுப் பிரபுலிங்கலீலை என்று பெயர் வைக்க விரும்புகிறீர்கள். சிற்றின்பச் சிவப்பிரகாச சுவாமிகளே! இந்த நாடகம் இங்கு நாள் தோறும் நடைபெற உங்களைப் போன்றவர்களின் உதவி எங்களுக்கு எப்போதும் தேவை என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

அவன் சிரித்தான்.

அவன் சிரிக்கின்றானே என்பதற்காக

அவளும் சிரித்தாள்.

______

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/67&oldid=1317944" இலிருந்து மீள்விக்கப்பட்டது