பக்கம்:எச்சில் இரவு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அவனுக்கு மன்மத மயக்கம்
அவளுக்குக் கண்மத மயக்கம்

ஜான்சிராணி லட்சுமிபாய் மிகவும் அழகாக இருப்பாளாம். அவள் முகம் உருண்டையாகவும், கண்கள் பெரிதாகவும், பேரொளி மிக்கதாகவும் இருக்குமாம்.

ஜான்சிராணியைப் போலவே, பூங்கோதை என்பவளும் அழகாகத்தான் இருந்தாள். அவளது முகமும் அம்பு விழிகளும் அப்படித்தான் இருந்தன.

அந்த ஜான்சிராணி, நடுத்தர உயரமுடையவளாம். பூங்கோதையும் அப்படித்தான் இருந்தாள்.

இந்தியப் பெண்கள் கல்வி கற்று முன்னேறவும், பூவும் பொட்டுமிழந்து வேதனைப்ப்டு. விதவைகளின் துயர் திரவும், தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பண்டிதைராமாபாய் அம்மையார் மிகவும் வியக்கத் தக்க கினைவாற்றல் உடையவராம். அவ்வம்மையார் தம்முடைய பன்னிரண்டாம் வயது முடிவதற் குள்ளாகவே பதினெட்டாயிரம் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவித்து வந்தாராம். அவ்வம்மையாரைப் போலவே பூங்கோதையும் பல்லாயிரக்கணக்கான செந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/68&oldid=1317946" இலிருந்து மீள்விக்கப்பட்டது