பக்கம்:எச்சில் இரவு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


தமிழ்ப் பாடல்களைச் சின்னஞ்சிறு வயதிலேயே மனப் பாடமாக ஒப்புவித்து வந்தவள்.

ஆட்டனத்தி என்பவன், மன்னன் கரிகாற் சோழனின் மருமகன். ஆதிமந்தி என்பவளின் கணவன். அவன், பரந்த மார்பும், உயர்ந்த தோளும், சுருண்ட குழலும், இருண்ட விழிகளும் உடையவனும். பூங்கோதையின் காதலனாகிய பொய்யா மொழி என்பவனும் அப்படித்தான் இருந்தான்.

அவனுக்கு அவள்தான் ஆதிமந்தி

அவளுக்கு அவன்தான் ஆட்டனத்தி

ஆட்டனத்தியோ ஆடற்கலையில் வல்லவன்பொய்யா மொழியோ அடுக்களைக்கலையில் வல்லவன். அதாவது, ஆசுகவி காளமேகத்தைப் போலவும், பழங்காலப் புலவராம் பகழிக் கூத்தரைப் போலவும் சமைப்பதில் வல்லவன். -

ஆதிமந்தியோ, ஊடத் தெரிந்தவள். கவிதை பாடத் தெரிந்தவள்.

பூங்கோதையோ, உடுக்கத் தெரிந்தவள், மாலை தொடுக்கத் தெரிந்தவள்.

தமிழ்நிட்டின் பெருமைக்கும், தமிழ்கலைக் வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சி ஊட்டி மாண்புறச் செய்தவரும்; இசைக் கலைக்கும், மருத்துவக் கலைக்கும், விவசாய வளர்ச்சிக்கும் அரும்பெருந் தொண்டாற்றி வந்தவரும், 'கருணாமிர்த சாகரம், என்னும் அரியதோர் நூலைத் தமிழிசை உலகுக்கு வழங்கியவருமாகிய தஞ்சை ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதரின் மூத்த மகளாகிய திருமதி அன்ன பூரண வல்லி என்பாரைப் போன்று பூங்கோதையும் வீணை வாசிப்பதில் வல்லவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/69&oldid=1317945" இலிருந்து மீள்விக்கப்பட்டது