பக்கம்:எச்சில் இரவு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


உங்களைக் கண்டால் என்முகம் மலரும் என்றாள் அவள்.

அப்போது, அவன் அவளது கையைத் தொட்டான். அவளோ, அருகில் தொங்கிக் கொண்டிருந்த தாழங்காயைத் தொட்டாள்.

"மக்களால் கொள்ளப்படாமல் தள்ளப்படும். இத் தாழங்காயை நீ ஏன் தொடுகிறாய்" என்று கேட்டான் அவன்.

"நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்! தாழங்காய் மக்களால் தள்ளப்படும் காயா?" என்று கேட்டாள் அவள்.

"ஆமாம், தாழங்காய் மக்களால் ஒதுக்கித்தள்ளப் படும் காய்தான்! நாவுக்கு மிகுந்த சுவை தராத பழத்தை நாவற்பழம் என்று சொல்லுவது போல, சாரமற்ற காயான இத்தாழங்காய் மக்களால் கொள்ளப்படாமல் ஒதுக்கித்தள்ளப் படுவதால்தான் இதனை எல்லோரும் தாழங்காய் என்று சொல்லுகிருர்கள், என்றான் அவன்.

"அப்படியா?" என்றாள் அவள்.

"ஆமாம்! காய்த்தும் பயன்படாத காய்தாழங்காய்!

கனிந்தும் பயன்படாத பழம்-எட்டிப்பழம். நீயோ,

காய்த்தும் பயன்படுகிறாய், என் கரங்களுக்கு.

கனிந்தும் பயன்படுகிறாய், என் இதழ்களுக்கு, என்று கூறிக்கொண்டே அவளைத் தழுவியபடி, பெண்ணமுதே! பித்ததேகம் உடையவர்களுக்குத்தான் கடைக்கண் சிவப்பாக இருக்குமென்றும்; உடல் எப்போதுமே வெப்பமாக இருக்குமென்றும் சொல்லுவார்கள். உன்கடைக்கண் சிவப்பாகவும், உன்னுடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/79&oldid=1318735" இலிருந்து மீள்விக்கப்பட்டது