பக்கம்:எச்சில் இரவு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


ரத்தமே” என்று சூரியன்தான் அழைக்க முடியுமே யன்றி, சுக்கிரனே, செவ்வாயோ ராகுவோ கேதுவோ அவ்வாறு அழைக்க முடியாது. அழைக்கவும் கூடாது.

வெற்றி பெற்ற வீரைெருவன் உடம்பில் விழுப் புண்ணுெடு தோன்றுவான். வீட்டில் நாம் ஏற்றி வைக் கும் ஒர் எண்ணெய் விளக்கு புகையொடு தோன்றும். உதயசூரியனே, அவ்வாறு உடம்பில் புண்னெடும், உச்சியில் புகையொடும் தோன்றுவதில்லை. தோண்டப் படாத கருங்கடலில் அன்ருடம் அது தோன்றும் போதெல்லாம், புகழொடு தோன்றும்:

தோன்றும் போதெல்லாம் புகழொடு தோன்றும் அக்தச் சூரியன், அப்போது மேற்கு வானத்தில் மிதந்து கொண்டிருந்தது. கான்மணிமாலை என்பவளோ, 1891ஆம் ஆண்டில் வெளிவந்த பெண்மதி போதினி” என்னும் திங்களிதழொன்றின் பத்தாவது பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் வளர்த்துவரும் பூனையோ அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்தது. வெளியூருக்குச் சென்றிருந்த அவள் கணவன் அப்போதுதான் வீட்டுக்கு திரும்பி வந்தான். அவனைக் கண்டவுடன் அவளது முகம் மலர்ந்தது. அவனது முகமும் மலர்ந்தது. ஒருவார காலமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவனது உதடுகளும் அப்போது மலாகதன.

அவள் அவனைப் பார்த்து, 'ஊரில் எல்லோரும் கலமாக இருக்கின்ருர்களா?' என்று கேட்டாள்.

எல்லோரும் கலமாகவே இருக்கிருர்கள்' என்ருன்

அவன. - . . . .

அத்தை வீட்டுக்குச் சென்றிர்களா?' என்று கேட்டாள் அவள். - ... • ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/88&oldid=1001337" இலிருந்து மீள்விக்கப்பட்டது