பக்கம்:எச்சில் இரவு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


அத்தை வீட்டுக்கும் சென்றேன். பக்கத்திலுள்ள ஒரு மெத்தை வீட்டுக்கும் சென்றேன்’ என்ருன் அவன். மெத்தை விட்டுக்கா? அங்கெதற்குச் சென் றிர்கள்?’ என்று கேட்டாள் அவள். -

"அவர்கள் வீட்டில் பிறந்த இரட்டைக் குழந்தை களுக்குப் பெயரிட வேண்டுமென என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அதற்காகச் சென்றேன்’ என்ருன் அவன். - -

'அக் குழந்தைக்கு நீங்கள் என்ன பெயரிட்டீர்கள்? என்று கேட்டாள் அவள். -

'ஒரு குழந்தைக்குக் குகாலன்' என்று பெயர் வைத்தேன், மற்ருெரு குழந்தைக்குத் திண்னன்’ என்று பெயர் வைத்தேன்’ என்ருன் அவன்.

என்ன குகாலனு ??

ஆமாம்! மாமன்னன் அசோகனுடைய மகன் ஒருவனுக்குக் குகாலன் என்று பெயர். அவனுடைய கண்கள் குகாலம்' என்னும் பறவையின் கண்களைப் போன்று மிக்க ஒளியுடையதாகவும் கருமையாகவும் இருந்த காரணத்தால் அவனுக்குக் குகாலன் என்று பெயரிட்டார்களாம். அந்த மெத்தை விட்டு ஆண் குழந்தையின் கண்களும் அவ்வாறே இருந்ததால் அக் குழந்தைக்கு கான் குகாலன் என்று பெயரிட்டேன். கண்ணப்பகாயனர் மற்ற குழந்தைகளைக் காட்டினும், பிறந்தவுடன் அதிக கனமாக, அதாவது திண்னென் றிருந்தாராம். அதனுல் அவருக்குத் திண்னன் என்று பெயரிட்டார்களாம். அவ்வாறே அவர்கள் வீட்டில் பிறந்துள்ள மற்ருெரு ஆண்குழந்தையும் திண்ணென் றிருந்த காரணத்தால் அக்குழந்தைக்கு நான் திண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/89&oldid=1001340" இலிருந்து மீள்விக்கப்பட்டது