பக்கம்:எச்சில் இரவு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


"அப்படியென்றால் மீதி ஐம்பத்தெட்டு ரூபாயை இனி எப்போது கொடுப்பாராம" என்று கேட்டாள் அவள்.

"இனிமேல் அவன் எங்கே அதைக் கொடுக்கப் போகிறான். ஒட்டக் கூத்தர் இயற்றிய 'எழுப்பெழுபது' என்னும் நூலிலுள்ள எழுபது பாடல்களுள், பன்னிரண்டு பாடல்களே கிடைத்திருக்கின்றன. எவ்வளவு முயன்றாலும் இனி ஐம்பத்தெட்டுப் பாடல்களும் கிடைக்க போவதில்லை. புலவர் ஏழுமலையிடமிருந்து இனி ஐம்பத்தெட்டு ரூபாயும் நமக்குக் கிடைக்கப் போவ தில்லை" என்றான்.

"உங்கள் நண்பர்கள் எல்லோரும் இப்படித்தானே! யார் நாணய முள்ளவர்கள்? உங்களிடம் வாங்கிய கடனை யார் இதுவரையில் ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்? இப்படி கொடுத்துக் கொடுத்தே நீங்கள் இதுவரை மூவாயிரத்தை நூறு ரூபாய் இழந்திருக்கிறீர்கள்" என்றாள் அவள்.

"நண்பர்கள் கேட்கின்றார்களே என்றுகொடுத்தேன் அவர்கள் இப்படி என்னை ஏமாற்றுவார்கள் என்று கான் எதிர்பார்க்கவே இல்லை. நானுவது மூவாயிரத் தைந்நூறு ரூபாயை இழந்திருக்கிறேன். காலஞ்சென்ற பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் முப்பத்தையாயிரம் ரூபாய்க்குமேல் இழக்திருக்கிறார். புலவர்பலருக்கு அவர் கடனாகத்தந்த ரூபாய் முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட புரோ நோட்டுப்பத்திரங்களை இனி வசூலிக்க முடியாதெனத் தெரிந்து கிழித்தெறிகது விட்டாராம்" என்று கூறினான் அவன்.

"இனிமேலாவது உங்கள் நண்பர்களிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள்" என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/92&oldid=1317355" இலிருந்து மீள்விக்கப்பட்டது