பக்கம்:எச்சில் இரவு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


இனி எச்சரிக்கையாக இல்லாவிட்டால்-நிச்சயம் நாம் பிச்சை யெடுக்க மேண்டியதுதான்" என்றான் அவன்.

மாலை அணியாத மாலைப் பொழுது,

மது அருந்தாமலேயே மயங்கிக் கொண்டிருந்தது.

பிறந்த தேதியை மறந்து விட்ட சூரியன், அப்போது மேற்கு வானத்தை விட்டு மெதுவாகக் கீழிறங்கி நீலக் கடலில் நீராடிக் கொண்டிருந்தது.

அந்தி என்று அழைக்கப்படும் அந்த நேரத்தில், அவனும் அவளும் வீட்டை விட்டு வெளியே புறப் பட்டனர். புறப்பட்டுச் செல்லும் வழியில், ஒர் ஏழையின் குடிசை தீப்பற்றி எரியும் செய்தியைக் கேள்வியுற்று, ஆங்கே இருவரும் விரைந்து சென்று, மற்றவர்களோடு தாங்களும் நின்று, அத்தியை அணைத்தபின் அவ்விடத்தை விட்டுப் புறப்படும்போது அவன் அவளைப் பார்த்து-

"இப்படித்தான் மேலைகாட்டுப் பேரறிஞர் எமர்சன் என்பவரின் வீடும் 24-7-1872 ஆம் ஆண்டில் தீப் பிடித்து எரிந்து விட்டதாம். அவ்வாறு எரிந்து போகவே, பொதுமக்கள் அனைவரும் உடனே நிதி திரட்டி, அவருக்குப் புதிய வீடொன்று கட்டிக் கொடுத்தார்களாம்" என்று கூறினான்.

"அப்படியா ! அந்நாட்டு மக்கள் அப்படிச் செய் தார்கள். இக்காட்டு மக்கள் அப்படிச் செய்வார்களா ? பாவம் ! இந்த ஏழைக்கு இரங்குபவர்கள் இவவூரில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இவனுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/93&oldid=1315964" இலிருந்து மீள்விக்கப்பட்டது