பக்கம்:எச்சில் இரவு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


அவளது புன் சிரிப்பைக் கண்டு கரைந்தது. மணலில் வீழ்ந்த மழைத்துளிகளைப் போல முடிவில் அது மறைந்தது. .

"அத்தான்" என்றாள்.

"நான் உனக்குத்தான்" என்றான்.

"நீர் வேண்டுமா?" என்று கேட்டாள்.

"நீர் வேண்டாம். இப்போது நீதான் வேண்டும்" என்றான்.

அவள் புன்னகை காட்டினாள்.

"புன்னகை, பல விஷயங்களை நேராக்கும் ஒரு சிறிய வளைவு" என்று கூறியபடி அவளுடைய கண்களில் முத்தமிட்டான்.

"என்னங்க இது! என் கன்னத்தில் முத்த மிடாமல் என் கண்களில் முத்தமிடுகிறீர்கள். சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், குழந்தையின் கண்களில்தான் முத்தமிடுவார்களாம். என்னையும் ஒரு குழந்தை என்று நீங்கள் எண்ணி விட்டீர்களா?" என்று கேட்டாள்.

"நீ, கண்களைப் போல் சிறந்தவள். அதனால்தான் நான் உன் கண்களில் முத்தமிட்டேன்" என்று கூறினான்.

"மனோன்மணீயம் என்னும் நாடகநூலின் ஆசிரியர் ராவ்பகதூர் சுந்தரம் பிள்ளையவர்கள், ஆண்டுதோறும் வரும் கோடை விடுமுறை காலங்களில் பெரும்பாலும் பாடல் பெற்ற திருக் கோயில்களுக்குச் சென்று அக்கோயிற் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/98&oldid=1318781" இலிருந்து மீள்விக்கப்பட்டது