பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

உடன்பிறந்தார் இருவர்


யும், ஏழையரை வாழ்விக்கத் தயாரிக்கப்பட்ட மாமருந்து ஆயிற்று. பெரு நெருப்பில் சிக்கிய சிறு குழந்தையைக் காப்பாற்ற, தீச்சுழலுக்கு இடையே புகுந்து, உடல் கருகி. வெந்து சாம்பலாகும் வீரம் போல், இரு சகோதரர்கள் அறப்போர் நடாத்தினர், அவர்களை அழித்தனர் அக்ரமக்காரர். எனினும், அக்ரமத்தை எதிர்க்கும் பண்பு அழிந்துபடவில்லை--வளர்ந்தது.

இரண்டு மாணிக்கங்களையும் இழந்த மூதாட்டி கர்னீலியா, தன் துக்கத்தைத் தாங்கிக்கொண்டு, வீரர் இருவர் வாழ்ந்தனர், வீழ்ந்துபடும் வரையில் கொள்கைக்காக உழைத்தனர், என் மக்கள் அவர்கள் என்று பெருமிதத்துடன் கூறிவந்த காட்சி கண்டு ஆறுதல் கூறவந்தோர்களே, அதிசயப்பட்டனர்! அம்மையின் வீர உள்ளம், அவ்விதம் அமைந்திருந்தது.

கொடுமைக்கு ஆளான அந்தத் தூயவர்களை எண்ணி எண்ணி, மக்கள் கசிந்துருகினர்.

கிரேக்கஸ் சகோதரர்களுக்கும் அன்னை கர்னீலியாவுக்கும், உருவச் சிலைகள் அமைத்தனர்; வீர வணக்கம் செலுத்தினர்.

ரோம் நாட்டு வரலாற்று ஏட்டிலே மட்டுமன்றி உலக வரலாற்று ஏட்டிலேயே, உன்னதமான இடம் பெறத்தக்க பெருந் தொண்டாற்றி, தியாகிகளான, இரு சகோதரர்களின் காதை, இல்லாமையை ஓட்டி பேதமற்ற சமுதாயத்தைச் சமைக்கும் பெருமுயற்சி வெற்றிபெறப் பாடுபடுவர்களுக்கெல்லாம். உணர்ச்சி அளிக்கும் காதையாகும்.