பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக ஒளி


"வேலை மாநகர் ஆட்சி மன்றத்தார், மணி மண்டபத்தில் விளங்கும் உத்தமரின் சிலையைத் திறக்கும் பணியினை எனக்களித்தார்கள். இது பற்றிக் குறிப்பிட்ட மன்றத் தலைவர் வேலூர் வரலாற்றிலேயே, இன்று, ஓர் பொன்னாள், எனக் குறிப்பிட்டார் என்னைப் பொறுத்தவரையிலேயே என்னுடைய வாழ்க்கையில்--என்--தமிழ் நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான கட்டம் என்று கூறுவேன். காந்தியாரின் உருவச் சிலையை நான் திறக்கிறேன்--இந்தச் செய்தியால், அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியை, நாடு அறியும்.

எனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு -- என்னைப் பொறுத்தவரையில் -- முதல் முறையல்ல; இரண்டாவது தடவை. இதற்கு முன்னரே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைப்பாடியிலே, ராஜாஜி பூங்காவிலேயுள்ள காந்தியாரின் சிலையை, நான் திறந்து வைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்; ஆனால், அங்குள்ள காங்கிரஸ் நண்பர்கள், இங்கு போல் கிலேசம் அடையவில்லை; பீதியடை யவில்லை; "இவனாவது, திறப்பதாவது!" என்று கூறவில்லை.

காந்தியாரின் உருவச் சிலையை நான் திறக்கிறேன்--நான் திறக்கவேண்டும் என்று நகராட்சிமன்ற நண்பர்கள் பெரிதும் விரும்பியிருக்கிறார்கள். காரணம் என்ன? காந்தியாரின் சிலையைத் திறக்க நான் மட்டுமே தகுதி-