பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

உலக ஒளி


யுள்ளவன் என்பதாலா? அல்ல! அல்ல! என்னை விடத் தகுதியுள்ளவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்; ஆனால், நான் வந்து திறக்க வேண்டும் என்று நண்பர்கள் விரும்பியதற்குக் காரணம் மற்றவர்கள் எவ்வளவோ திறப்பு விழாக்களைச் செய்கிறார்கள்--அதோடு, இதுவும் பத்தோடு பதினொன்றாகப் போய்விடும்--ஆகவே, இவனையும் இது போன்ற காரியத்துக்குத் தகுதியுடையவனாக்குவோம் என்ற நல்லெண்ணமாகவே இருக்கும் எனக் கருதுகிறேன்.

எனக்குப் பதில், இந்நாட்டு முதலமைச்சர், காந்தியாரின் சிலையைத் திறந்திருக்கலாம்; ஆனால், அது அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்காது. அவர் அடிக்கடி திறந்து வைக்கும் பல சின்னங்களிலே, இதுவும் ஒன்றாகப் போயிருக்கும்; அதனாலேயே, என்னை காந்தியாரின் முகாமிலே இல்லாதவனும்--அவரது திட்டங்களில் சிலவற்றை ஏற்று, சிலவற்றைக் கண்டித்தவனும்--ஆகிய என்னை--இந்தப்பணியை நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கண்டு, எனதருமைக் காங்கிரஸ் நண்பர்கள் கலக்கமா அடைவது?

மாற்றான் தோட்டத்து மல்லிகை யென்பதால், அதன் மணத்தை ரசிக்கிறானா, அல்லது ரசிக்க மறுக்கிறானா எனப் பார்த்திருக்கலாம்! என்னைப் பொறுத்த வரையில், மல்லிகை மாற்றாரிட மிருப்பதால், அதற்கு மணமிருக்காது என்று உரைப்பவனல்ல. அதனால்தான், நண்பர்கள் வந்து, என்னை அழைத்ததும், ஒப்புக் கொண்டேன்.

அவர்கள் அழைத்த நேரத்தில், நகராட்சி மன்றத்தினர் மெஜாரிடி முடிவோடு, என்னை அழைக்கத் தீர்மானித் திருப்பதாகவும்--ஒரு முறைக்கு இரண்டு முறை--தீர்மா-