பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

103


னம் நிறைவேற்றி யிருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஆகவே நான் இசைந்தேன்.

இந்தச் சிலைத் திறப்பு விழாவுக்கு, உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியினரும் கடைசி நேரத்தில் கூடி, இந்த விழாவில் ஒத்துழைக்க வேண்டுமெனத் தீர்மானம் செய்தார்களாம் இந்தப் பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றியைக் கூறிக்கொள்ளுகிறேன்.

ஏன், இவர்களுக்கெல்லாம் நன்றி கூறுகிறேன் என்றால்--இது போன்ற பெருந்தன்மை, அரசியல் வாழ்வில் நிலவவேண்டும் என்ற ஆசை கொண்டவன் நான். அதற்கு உதாரணம் போல், நாம் எல்லாம் நடந்து கொள்ள வேண்டும்.

'உத்தமர் காந்தியாரிடத்தில். எனக்கு மதிப்பு உண்டா?' இவ்விதம் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்குச் சொல்வேன்-மதிப்புகாட்டுவது என்பது இருவகைப்படும். எதிரில் வாயாரப் புகழ்ந்து விட்டு, தலைமறைந்ததும் மாறாகப் பேசுவது ஒருவகை! பழகா விட்டாலும், கூடாரத்திலில்லா விட்டாலும், பிறரின் பணியினை தனித்திருக்கிற நேரத்தில் எண்ணி எண்ணி, மகிழ்வது இரண்டாவது வகை.

நான் இரண்டாவது வகையைக் சேர்ந்தவன். நம்முடைய உலக உத்தமர், உயிரோடிருந்த நாட்களில்--பிடிக்காதவைகளைக் கண்டித்த போதும் எனக்கேற்ற எண்ணங்களைப் பாராட்டிய போதும், அவருக்குள்ள சிறப்பை நான் எண்ணாமலிருந்ததில்லை.

மாற்றார் காந்தியாரைப் பற்றி, எண்ணு மளவுக்கு, அவருடைய தொண்டு இருந்ததால்தான், அவர் உலகத்-