பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாதுரை

105


அப்படிப்பட்ட விபரீதங்களைக் கண்டு கை கொட்டும் கருத்துற்றவனல்ல நான்.

'உத்தமரை, ஒருவனின் வெறி கொன்றுவிட்டது. அதற்குப் பார்ப்பன மக்கள்மீது பழி சுமத்தக் கூடாது என்று எடுத்துரைத்தேன். உத்தமரின் சேவைகளை எடுத்துரைத்தேன். அந்த நேரத்தில் எந்தக் காங்கிரஸ்காரருக்கும் ஏற்படாத அதிர்ச்சி இப்போதேன் ஏற்பட வேண்டும்?

அந்த நிகழ்ச்சி முடிந்த சின்னாட்களுக்கெல்லாம், காங்கிரஸ் தேசீயக் கவியான நாமக்கல் கவிஞரை, ஓரிடத்தில் நான் சந்திக்க நேர்ந்தது. அப்போது, அவர் என்னைப் பாராட்டினார்--'காந்தியடிகளின் அருமை பெருமைகளைப் பலர் உரைக்கக் கேட்டிருக்கிறேன்; ஆனால், ரேடியோவில் தாங்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டபோது, நான் மனம் குளிர்ந்தேன்; யாரும் அப்படிச் சொல்லியதில்லை' என்று தன்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார்.

என்னுடைய சொந்த விஷயங்களை எடுத்துக் கூறுவது எனது வழக்கமல்ல; ஆனாலும், இதனை இங்குள்ள தேசீய நண்பர்களுக்காகக் குறிப்பிட விரும்புகிறேன். எனவே என்னைப் போன்றவன்--காந்தியாரின் அடிப்படை ஆசைகளையும், அவைகளைச் சாதிக்க அவர் ஆற்றிய அரும் பணி யினையும் கண்டு அகமகிழ்ந்தவன்--இந்தச் சிலையைத் திறந்து வைப்பதில், பொருத்த முடையதாகாது என்று யார் கூற முடியும்?

நான் என்ன, நாள் முழுதும் காங்கிரசைத் தூற்றிக் கொண்டிருந்து விட்டு, தேர்தல் காலத்தில் காங்கிரசிலே நுழைந்து கொண்டு, வேட்டையாடியவனா! காங்கிரஸ்