பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

107


இவ்வண்ணம் மாற்றுக் கட்சியாருடன் மனமொத்துப் போவதுதான் அரசியல் நாகரீகம். எனது தலைவர் பெரியாரும் முதலமைச்சர் ஆசாரியாரும் நபிகள் நாயகத்தின் திரு நாளில், ஒரே இடத்தில் சந்தித்தார்கள். அது அரசியல் நாகரீகம்.

இன்று நான் காந்தியாரின் சிலையைத் திறக்கிறேன் ! இது ஓர் புனிதமான நாள் எனக் கூறுவேன். இந்தச் சிலையைத் திறக்கும் விஷயத்தில் கட்சிப் பாகுபாடு கட்சி வெறி இல்லாது, எல்லா அரசியல் கட்சிகளும் ஒத்துழைத்திருக்க வேண்டும் -- அதுதான் அரசியல் நாகரீகம்.

அப்படியின்றி, அரசியல் அமளியிலீடுபட்டால் இந்த உபகண்டத்தின் பிதாவுக்கு. கீர்த்தி தேடியவர்களாக மாட்டோம்.

எனக்கும் காங்கிரசுக்கும் பலமான கருத்து வேற்றுமைகள் உண்டு. அதே போல, கருத்து ஒற்றுமைகளும் உண்டு. காங்கிரசுக்கு மட்டுமல்ல - மற்றக் கட்சிகளுக் கும் எனக்கு மிடையே, கருத்து வேற்றுமைகளும் உண்டு, ஒற்றுமைகளும் உண்டு.

நன்றாகச் சிந்தித்தால், விளங்கும் வேற்றுமைகள் கொஞ்சம்; ஒற்றுமைகள் அதிகம். இந்த ஒற்றுமைப் பண்புவளர, ஒவ்வொரு கட்சியும் அரசியல் அமளியிலீடுபடாமல், ஒத்துழைக்கும் மனோபாவம் ஏற்பட்டு, அரசியல் நாகரீகம் வளர வேண்டும்.

காந்தியார் இறந்த பிறகு கட்டப்பட்டுள்ள சமாதியிருக்கும் ராஜ கட்டத்துக்கு, அமெரிக்க நாட்டுத் தூதுவர் வந்து, மல்லிகைச் செண்டுகளை வைத்து வணக்கம் செலுத்துவதையும், பாகிஸ்தான் நாட்டுப் பிரதமர் வந்து