பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சி. என். அண்ணாதுரை

109


சுதந்திரம் கிடைத்தபின், உத்தமர் காந்தியடிகளே சொன்னார் — 'சுதந்திரத்தில் ஒரு கட்டத்தைத்தான் தாண்டியிருக்கிறோம்; இந்தச் சுதந்திரம், ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக அமையவேண்டும்' என்று.

அவர் வெளியிட்ட அதே கருத்தைத்தான், நானும் கூறுகிறேன்; "களிப்படையவில்லை. கவலை கொள்ளுகிறேன்!" என்றார். அதுதானே. நிலையும்!

சுதந்திரம் காகிதப் பூவாக இல்லாமல், மணமுள்ள பூவாக இருக்கவேண்டுமானால் மாற்றுக் கட்சிகள் யாவும் வந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பம் அளிக்கப் படவேண்டும்.

யாரைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும், 'சுதந்திரக் குழந்தை! சுதந்திரக் குழந்தை' ! என்கிறார்கள். அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி விட்டால் மட்டும் போதாது. தாலாட்ட வேண்டும்--சொக்காய் போடவேண்டும்--விளையாட்டு காட்ட வேண்டும்--இது அத்தனையையும் தாயே செய்துவிட முடியாது. மாமன்மார் விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிவர, தங்கை தாலாட்டுப் பாட, உற்றார் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்ச இவ்விதம் வளர வேண்டும், அக் குழந்தை !

அப்படியில்லாமல், குழந்தையை நான் தானே பெற்றேன் என்று சொல்லி 'மற்றவர் எவரும் அருகில் வரக் கூடாது.' என்று பெற்றெடுத்த தாய் சொன்னால்' குழந்தையை எவரும் சீந்தார் ! குழந்தையின் அருமை பெருமையையும் அறியார் !! அதுபோலவே, பிறந்த சுதந்திரக் குழந்தையைச் சீராட்டி வளர்க்க, எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சந்தர்ப்பம் வேண்டும், குழந்தைக்கு, அடிக்கடி உணவு