பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

11


பரவும், வெல்லும்! ப்ரூனோ, அந்த எட்டு நாட்களும். இதையன்றி வேறெதனை எண்ணிடப் போகிறான். குவித்து வைத்த பொன்னை யார் அனுபவிப்பார்களோ, குலவிவந்த கிளியை எந்தக் கூண்டிலே கொண்டுபோய் அடைப்பார்களோ. மனைவி மக்கள் என்னவென்று கூறிக் கதறுவார்களோ என்றா எண்ணி ஏங்கப் போகிறான். ப்ரூனோ. துறவி! தூர்த்தர்கள் பலர் அதனை வேலையாகக் கொண்டு, 'துறவி' எனும் சொல்லையே மாசுபடுத்தி விட்டனர் -- எனவே ப்ரூனோவைத் 'துறவி' என்று கூறுவது, அவருக்கு உள்ள மாண்பினை பாதிக்குமோ என்று கூட அஞ்சவேண்டி இருக்கிறது. ப்ற்ரூனோ, கொள்கைக்காகப் போரிடும் அஞ்சா நெஞ்சினன்--வாழ்க்கையில் இதற்காகவன்றி வேறு எதற்கும், அவருக்கு நேரமும், நினைப்பும் கிடையாது. எனவே எத்தனை நாள் தவணை தரப்பட்டாலும், நெஞ்சு தடுமாறாது அந்த நெஞ்சம் அவ்வளவு உறுதிப்பட்டுவிட்டிருக்கிறது. நச்சு நினைப்பினர் அதனை அறியார்.

ஏன், அவர்கள், ஜியார்டானோ ப்ரூனோ, மடிவதைவிட மனம் மாறிவிடுவது நல்லது என்று எண்ணினர்? நாத்தீகன் ஒழியத்தானே வேண்டும்? ஏன் பிழைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றனர்--புனித மார்க்கத்தை ஏற்றுக்கொள், பூஜ்யர்களை வணங்கு, உயிர் பிழைக்கலாம் என்று ஏன் கூறினர். நேர்மையும் ஈரமும் கொண்டனரா? இல்லை! சிங்கத்தைக் காலடியில் விழச்செய்தால், காண்போர், எவ்வளவு பெருமை தருவர் ! சிறு நாய்கள் நத்திப் பிழைக்கின்றன--பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது நரிகள் பதுங்கிக் கொள்கின்றன--தேடுவதே கஷ்டமாகி விடுகிறது. இதோ சிங்கம்--வீரமுழக்கத்தை எழுப்பிய வண்ணம் இருக்கிறது ! வலையில் வீழ்வதில்லை; கணைக்குத் தப்பி விடுகிறது -- காடு ஒன்றிலே வேட்டையைத் துவக்கினால், வேறோர் காடு