பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

உலக ஒளி,


தந்து--அதிகமாகவும் தந்து--யாரிடமும் அண்டவிடாமல் சில பணக்காரக் குடும்பத்திலே வளர்க்கப்படும் குழந்தை, கடைசியில் நோஞ்சானாகி விடும் ! டாக்டரிடத்தில் செல்ல நேரிடும் !!

இதையேநான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சுதந்திரக் குழந்தையைத் தூக்கி · மகிழ, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் சந்தர்ப்பம் தாருங்கள். எங்களிடம் விட்டுப் பாருங்கள் நிச்சயம், கெடுதல் வராது.

அப்படியே கெடுதல் வருவதாகக் கருதுவீர்களேயானால் உங்களுக்குப் பிடித்தமான, கிருஷ்ணன் கதையையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கிருஷ்ணனுக்குப் பாலூட்டச் சென்ற பூதகிபோல் நாங்கள் என்றால், கிருஷ்ணன் கவனித்துக் கொள்வான் அந்த நம்பிக்கையாவது இருக்கக் கூடாதா உங்களுக்கு!! அதை விட்டுவிட்டு எங்களைக் கண்டால், ஏன் பயப்பட வேண்டும்?

காந்தியாரின் சிலையை நான் திறந்து வைப்பதைக் காணும் நீங்கள், முகத்தையா தொங்கப்போட்டுக் கொள்வது?--'பார்! எதிர்க் கட்சிக்காரனாகிய அவனே எங்கள் காந்தியின் சிலையைத் திறக்கிறான். எங்கள் காந்திஜியின் பெருமை யல்லவா, இது?' என்று நீங்கள் மார்பல்லவோ தட்ட வேண்டும் !

காந்தியாரின் புகழுக்குக் காரணம், குடும்பத்திலேயிருந்தவர்களால் மட்டும் உண்டானதல்ல, வெளியேயிருந்தவர்கள் அவரைக் கண்டு. அவருக்கு அஞ்சலி செய்ததால்தான். உலக ஒளியானார் அவர்.

நான், திறப்பதைக் கண்டு, சந்தோஷமடைய வேண்டும். இந்த மேடையில் எனது நண்பர் காங்கிரஸ் எம்.-