பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

111


எல். ஏ. தோழர் மாசிலாமணி அவர்களும் இருந்திருந்தால் மிகவும் பெருமையா யிருந்திருக்கும்.

நான் யார்? நீங்கள் யார்? நமக்கு இடையிலிருக்கும் உறவு முறை - முறிகின்ற முறை -இருக்கலாகாது. இதனை காங்கிரஸ் நண்பர்களுக்கு, வலியுறுத்திச் சொல்லுவேன், சில பல கருத்து மாறுபாடிருக்கலாம். எனக்கும் உங்களுக்கும்--காந்தியாரின் சில கொள்கைகளை, மறுக்கின்ற முகாமில்தானிருக்கிறேன். நான், ஆனால் அதற்காக, நாட்டு விடுதலையை மறக்கவில்லையே! உத்தமர் வாங்கித் தந்த விடுதலையை மறைத்துக் கூறுபவன்--ஏமாளி!

அவர் விரும்பியது இந்த நாட்டுக்கு சுயராஜ்யம் மட்டுமல்ல; அவர் விரும்பிய சுயராஜ்யமல்ல, இன்று இங்கே இருப்பதும்.

ஏழை--பணக்காரன், கூடாது! மதத்தின் பெயரைச் சொல்லி, ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்வது கூடாது மோதலை உண்டாக்கக் கூடாது--ஜாதி ஆணவம் கூடாது என்றார் அவர்.

அத்தகைய விடுதலை பூமியைக் காண விரும்பினார் ! அதனாலேயே ஒருமுறை, அவரைக் கேள்வி கேட்டபோது கேட்டவருக்கு விளக்கினார்.

"வைணவர் என்றால் யார்? நெற்றியிலே திரு நாமமும் நெஞ்சிலே வஞ்சகமும். கழுத்திலே துளசிமாலையும் கருத்திலே கபட எண்ணங்களும் கொண்டவர்களல்ல. உண்மையான உள்ளம் கொண்டவர்கள்," என்று விளக்கினார்.