பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

115


கிடைக்கிறது; நோஞ்சலாயுள்ளவன் ஓட்டை எடுத்துக் கொண்டு போகிறான்.

திராவிட முன்னேற்றக் கழகம், தன் செல்வாக்கை அவ்வப்பொழுது பலப் பரீட்சை நடத்தாமல், பலாத்காரத்தில் இறங்காமல், ஒருவரோடு இன்னொருவர் மோதிக்கொள்ள உதவாமல் பயன்படுத்த வேண்டும். வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்க்க வலிவைத் திரட்டுவதுதான் நம் வேலையாக இருக்கவேண்டும்.

வலிமையை எந்தப் பெரிய நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டுமோ அதற்குப் பயன்படுத்த வேண்டும். தி. மு. கழகம் தன் வலிமையைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சமயம் வரும்போது இதை பயன்படுத்திக் கொள்ளத் தவறமாட்டோம். ஆனால், 'சூறைக்கா'யாகவும் ஆக்கிவிட மாட்டோம்.

தமிழர் என்ற உணர்ச்சியையும், திராவிடம் என்னும் இலட்சியத்தையும் மக்களிடம் ஊட்டிவிட்டால் பிறகு வெற்றி பெறுவது மிக எளிது!

மாசெனத் தூற்றியோர் மனம் மாறிவிட்டனர் !

நமக்கு மிகமிக சகிப்புத் தன்மை வேண்டும்; வளர்ந்திருக்கின்ற சக்தியைக் கட்டிக் காக்க திறமை பெற்றாக வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமலே நம்மைத் தாக்கிப் பேசினால், அவர்கள்மீது கோபம் வருவதைவிட, என்னைப்பற்றி நானே வெட்கப்படுவேன்--எவ்வளவு பன்னிப்பன்னிச் சொல்லியும், எவ்வளவு ஆதாரங்களை--விளக்கங்களை அழகாக எடுத்துரைத்தும், அவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு நாம் சொல்ல முடியவில்-