பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

நல்ல தீர்ப்பு

பொன் மொழிகள்


லையே; அதனால்தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கருதுகிறேன்.

நாம் கொண்டிருக்கிற நோக்கம் சாமான்யமானதல்ல--நாட்டை மீட்கும் ஒரு பெரிய பிரச்சினை.

நாம் இதற்கு இரத்தம் சிந்தாமல், பலாத்காரத்தில் இறங்காமல், வியர்வையையும் கண்ணீரையும் மட்டுமே சிந்தி நாட்டைப் பெறவேண்டும். பர்மாவும், இந்தோனேஷியாவும் சுதந்திரம் பெற்றதுபோல் யாராவது ஆயுதம் கொடுப்பார்களா என்றோ, நாகர் நாடு கோருபவர்களுக்கு எங்கிருந்தோ ஆயுதங்கள் கிடைக்கின்றன என்கிறார்களே அதைப்போல கிடைக்குமா என்றோ, நாம் காத்திருக்கவில்லை.

அறிவுச் சுடரைக் கொளுத்தி சுதந்திரம் பெற வேண்டும்; ஏழை எளியவர்கள் குடிசைகளைக் கொளுத்தியல்ல!

என்னை ஒரு கொட்டடியிலும், ஈழத்தடிகளை ஒரு கொட்டடியிலும். அருணகிரி அடிகளை ஒரு கொட்டடியிலும், பெரியாரை பெல்லாரி சிறையிலும் அடைத்து வைத்திருந்தபோது, கனவாவது கண்டிருப்போமா-- 'இதே ஆச்சாரியார் இப்படி இந்தியை நம்முடன் சேர்ந்து எதிர்ப்பார்'-- என்று? அல்லது அவர்தான் எண்ணியிருப்பாரா? மும்முனைப் போராட்டத்தின்போது இதே ஆச்சாரியார்தான், ஈ, எறும்புபோல இவர்களை நசுக்கி விடுவேன்' என்று கூறினார். இவர்கள் இயக்கத்தைப் பழங்கதையில் சேருமாறு செய்துவிடுவேன் என்றார். அப்படிப் பேசியவர்தான் அண்மையில் மைலாப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், 1990 வரை இந்தித் திணிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்னும் சுப்பராயனின் கோரிக்கையைப் பிய்த்தெறிந்து இருக்கிறார். அவருடைய பேச்சு முழுவதையும் நீங்கள்