பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை

119


முடியும். ஆனால் மனிதர்களால், அதுவும் மானமுள்ளவர்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அந்த ஏமாளிகள் பணங் கிடைக்கவில்லை என்று ஏங்கவில்லை--நினைத்தால் ஆயிரக்கணக்கில் தங்கள் காலடியில் கொண்டுவந்து கொட்டச் செய்யும் சமத்தும் சாமர்த்தியமும் அவர்களுக்கு உண்டு. புகழ், பெருமை, முகஸ்துதி இவற்றில் பங்கில்லையே என்று கலங்கவில்லை--இவையெல்லாம் எதிர்பார்ப்பதற்கு மேலாகவே நாட்டிலே கிடைத்தது. ஆனால் அவர்கள் உழைப்பு ஒத்துக்கொள்ளப்படவில்லை வாழ்வைப் பலியிட்டு வதைபட்டவர்கள் மேல் நம்பிக்கை உண்டாக வில்லை. எப்படியோ முளைத்து, எதற்காகவோ சேர்ந்து வாழ்ந்த ஜீவன்கள்மேல் ஏற்பட்ட நம்பிக்கை கூட இந்த இரங்கத்தக்க தியாகிகள்மேல் ஏற்படவில்லை. அவர்கள் உழைத்தார்கள் - வாழமுடியாதவர்களா ! பொறுக்க முடியாத நிலை வந்ததும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினர்.

சினிமாத் துறையில் சேர்ந்து பணத்தைக் குவித்துக் கொள்ளுகிறார்கள். பள பளப்பான வாழ்வு நடத்துகிறார்கள்--பவுடர் மோகினிகளோடு சேர்ந்து சுற்றுகிறார்கள்.

கருத்து வேறுபாட்டால், எதிர்க்க வேறு காரணம் இல்லாமல் கதறிக்கொண்டிருக்கும் கன்றாவி உருவங்களைப் பற்றியல்ல நான் குறிப்பிடுவது. கையாலாகாதவர்கள் குலைக்கத்தான் செய்வார்கள்! ஆனால், கருத்தும் கொள்கையும் குறிக்கோளும் ஒத்திருந்தும், உயருகிறார்களே என்ற பொறாமையால் உளறிக் கொட்டும் உதவாக்கரைகளைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

இத்தகையோர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்--பணம், பத்திரிகை பக்தர்கள் பலத்தால் ! விழியிலே பழுதிருப்பது வேறு--விழிகளே இல்லாதிருப்பது வேறு. ஆனால், விழிகளில் பழுதிருப்பவர்களுக்கு விழிகளே