பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

பொன் மொழிகள்


யானை ஒரு இழுப்பு இழுத்தால் அதன் கட்டு அறுந்து விடும். அதுமட்டுமா? விடுபட்ட யானை தான் கட்டப்பட்டிருந்த வாழைமரத்தையே கூட வாயில் போட்டுக் கொள்ளும், அது யானை என்ற காரணத்தால். ஆகையால் வெறும் நாரினால். வாழைமரத்தில் யானையைக் கட்டுவதில் பயனில்லை என்று கூறுகிறோம் நாம். 'அரசாங்கமே, யானையை அடக்க வாழை மரத்தில் கட்டாதே!' என்று அரசாங்கத்துக்கு அறிவுறுத்துகிறோம். நாட்டைப் பிரித்துவிட்டால், வெளிநாட்டு முதலாளிகள் தலைகாட்ட முடியாது திராவிடத்தில் ! முதலாளிகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுதலையடையும் திராவிடம். அந்தத் திராவிடத்தை அடைவதுதான் நமது இலட்சியம்.

ஆங்கிலத்தின் அவசியம் !

ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் சில தேசியத் தோழர்கள்--தங்களுடைய தேசியம் முற்றிவிட்ட காரணத்திலே என்று நான் கருதுகிறேன் -- ஆங்கிலம் அன்னிய மொழி. ஆகவே, ஆங்கிலம் ஆகாது என்று !

அன்னியருடைய வழிகளெல்லாம் நமக்குத் தேவையில்லை யென்றால், இரயில் அன்னியன் கொடுத்ததுதான். கார்டு, கவர்களை அன்னியன் காலத்திலேதான் பார்த்தோம், தபால்--தந்தி அன்னியன் காலத்திலேதான் கிடைத்தது. ஆப்ரேஷன்,,இஞ்செக்ஷன் அன்னியன் காலத்தில் வந்தவை தான். இவைகளெல்லாம் இருக்கலாம் ஆனால். அவர்களுடைய மொழி மட்டும் இருக்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லுவது எந்த வாதம் என்பது எனக்குப் புரியவில்லை.

ஆகையினாலேதான், ஆங்கிலத்தை அன்னிய மொழி என்று கருதாமல், அன்னியரோடு தொடர்பு படுத்துகின்ற