பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

123


மொழி--என்று கருதுகிற காரணத்தால் நாம் அதை விலக்க முடியாது.

நமது கருத்து

பாட்டாளி மக்களே பெரிதும் சுரண்டப் படுகிறார்கள், முதலாளிவர்க்கத்தாலும் புரோகிதவர்க்கத்தாலும். தொழிலாளர் கிளர்ச்சிகளின் போது பொருளாதாரப் பிரச்னையை மட்டுமே கவனித்தால் போதும் என்று எண்ணுகிறார்களேயொழிய புரோகிதப் பிடியிலிருந்து விடுபடும் முயற்சியைப் புறக்கணித்து விடுகின்றனர்.

திராவிட இனத்திலே மிகப் பெரும் பகுதியினர் பாட்டாளிகளே. ஆரிய இனமோ பாடுபடாத பிறவி, முதலாளி வர்க்கம். ஆகவே, ஆரிய--திராவிடப் போர் என்பது அடிப் படையிலே பார்த்தால் பொருளாதார பேத ஒழிப்பு திட்டந்தான்.

ஜாதி முறை, சடங்கு முறை என்பனவெல்லாம் தந்திரமாக அமைக்கப்பட்ட பொருளாதார சுரண்டல் திட்டமே யாகும். ஆகவே ஜாதி முறையை ஒழிப்பதும் சமதர்ம திட்டந்தான்.

தொழிலாளர்கள் ஆரிய ஆதிக்கத்தை அகற்றாமல் பொருளாதாரத் துறையிலே எவ்வளவு முன்னேறினாலும் அவர்களுடைய வாழ்வு மலரமுடியாது. ஆகவே அவர்கள், ஆரிய ஆதிக்கத்தை அகற்றவேண்டும்.

பாட்டாளிகள் என்றால் ஆலைத்தொழிலிலே ஈடுபட்டு சங்கம் அமைத்துக் கொண்டு, கூலி உயர்வு, குடியிருக்கும் வீட்டுவசதி. சுகாதார வசதிகள் ஆகியவைகளுக்காக கிளர்ச்சிகள் நடத்துபவர்கள் மட்டுமல்ல. பண்ணைவேலை செய்பவன், கல் உடைப்பவன், கட்டை வெட்டுபவன், குப்பை கூட்டுபவன் போன்ற சங்கமோ கிளர்ச்சி செய்யும் உணர்ச்-