பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

பொன் மொழிகள்


பொதுமக்களின் மனதை பிரசார பலத்தாலும், நியாயமான காரணங்களுக்காக போராடுபவர்களின் சக்தியை அடக்கு முறையாலும், முன்னதை மயக்கவும் பின்னதை முறியடிக்கவும் இன்றுள்ள ஆளவந்தார்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

நல்ல தலைவர்கள் தேவை

படித்த உங்களிலிருந்து பண்பும் பயிற்சியும் பெற்றவர்கள் பலர் தொழிலாளர் தலைவர்களாக வரவேண்டும். தொழிலாளர்களிலும் திறமையுள்ளோர் தலைவர்களாக வரவேண்டும். உங்களைப் போன்ற நடுத்தர வகுப்பினர் உள்ளன்பு வைத்து உங்களிலேயே தக்கவரை தலைவராக ஆக்கவேண்டும். தலைவர்களை உங்களிலேயே உற்பத்தி செய்யுங்கள்.

வயலிலே ஓயாது உழைக்கின்ற விவசாயி சிந்தனை செய்ய முடியாது, சிக்கலான பிரச்னையைப்பற்றி. நேரமில்லை அவனுக்கு உழைப்பு அதிகமென்பதால், ஆலையில் வேகின்ற தொழிலாளி அதிக நேரம் செலவிட முடியாது இத்தகைய பிரச்னைகளிலே. ஆனால் படித்த குமாஸ்தாக்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்களல்ல; உங்களுக்கு வாழ்க்கையில் ஓரளவு சௌகரியம் உண்டு. ஓய்வாக யோசிக்க முடியும். பொறுப்பு என்ன, இன்றைய குறைகளைத் தீர்க்க வழி என்ன என்று!

ஆலைத் தொழிலாளிகளையும், வயலிலே ஓயாது உழைக்கும் விவசாயிகளையும், வண்டி ஓட்டுபவரையும். வீதிகூட்டுவோரையும், சிறு கடை தொழிலாளரையும். கட்டை வெட்டுவோர் போன்ற எல்லாவகை தொழிலாளர்களையும் பற்றி கவலைகொண்டு ஒன்று திரட்டி நீங்களே நடத்தலாம். விஷய விளக்கமும் தரலாம். அறிந்திருப்போர், அறியாதவ-