பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாதுரை

127


ருக்கு அறிவித்தல் நல்லது. தெரிந்திருப்போர் தெளிவில்லாதவர்க்கு தெளிவுபடுத்தலாம் பற்பல பிரச்னைகளைப் பற்றியும். உங்களை நீங்களே காத்துக்கொள்ளும் நிலைபெற்றால் பிற அரசியல் சூதாட்டக்காரர்களுக்கு வேலை ஏது உங்களிடம் ! எனவே, உங்களிலேயே உண்மைத் தலைவர்களை உண்டாக்குங்கள்.

தொழிலாளர் !

விதைத்துழுது அழுகிறாய் ;
வதைத்தறுத்துச் செல்கிறான் !
கொண்டு சென்று குவிக்கிறாய் ;
கொட்டிப் பூட்டி வைக்கிறான் !

பார், பாட்டாளித் தோழனே நன்றாகப் பார்! இதயத்தை உறுத்துகிறதா... மூடிக்கொள்ளாதே கண்களை விழித்துப் பார் ! வேதனை எழும்புகிறதா ? யார்...நீதான் பார்க்கவேண்டும்...கண் மூடிக் கிடந்தவனே, நான் காட்டுவது தெரிகிறதா? நீதான் அவன்...அதை நினைத்த வண்ணம் இக்காட்சிகளைப் பார்!

ஏர்பிடித்துழுகிறாய் ;
மார்பிலுதைத்து வதைக்கிறான் !
பாடுபட்டு நெய்கிறாய் ;
பட்டுடுத்தி மகிழ்கிறான் !

ஏன் கண்களை மூடிக்கொள்கிறாய்? கடினமாக இருக்கிறதா?...நீதானப்பா நாட்டின் தேனீ, நடமாடும் தெய்வம்!...? இந்தக் காட்சிகளைக் கண்டதுமே, தவிக்கிறாயே ! இத்தனை நாள் வேதனை உன்னை சந்தித்த போதெல்லாம் எங்கே மறைந்து போய்க் கிடந்தது, இந்த ஆத்திரம்? இன்னுங் கொஞ்சம் பார் !