பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

13


அதிகமாக இருந்தது மடாலயத்திலே சேரும்போது. அங்கு தான் அறிவுத்தாகம் தீரும் என்று எண்ணிச் சென்றான்.

புது நெறிகள் புரட்சிபோலக் கிளம்பி, கத்தோலிக்க மார்க்கத்தைக் குலைத்தபோது, வெடிப்புகளை மூடவும். வெதும்பியதைக் களையவும், பூச்சுகளைப் புதுப்பிக்கவும், எடுத்துக்கொள்ளப்பட்ட பல முயற்சிகளிலே, டாமினிக் தேவாலய இயக்கம் ஒன்று. தூயநெறி நிற்பது, தூய்மையைப் பரப்புவது, வழி தவறியவர்களை மீண்டும் நன்னெறி கொண்டு வந்து சேர்ப்பது என்ற நோக்கத்துடன், கற்றறிவாளர்கள், கர்த்தரின் சுவிசேஷம் உணர்ந்த வித்தகர்கள் துவக்கியது, டாமினிக், மடாலயம்.

நாத்தீகத்தை நசுக்குவதற்கான நல்லதோர் ஏற்பாடு என்றனர் இதனை-- அது உலகு வியக்கும் அறிவுத் திலகம் ப்ரூனோவை அளிக்குமென்று, எவ்வளவோ ஜெபதபம் செய்தும், டாமினிக் துறைவிகளுக்குத் தெரியவில்லை. அறிவுக் கூர்மையுள்ள வாலிபர்களை, அவர்களைப் பாசம் பற்றிக் கொள்ளா முன்னம், ஆலயக்கல்லூரியில் கொண்டுசேர்த்து, ஐயன் பெருமைகளைக் கூறி, நல்ல 'சாமியார்' ஆக்கிடும் வேலையில், டாமினிக் மடாலயம் ஈடுபட்டிருந்தது. ப்ரூனோ, மடாலயம் அளித்த கல்வியைக் கற்றான்--ஆனால் கசடு அறக் கற்றான்! இவனை, மடாலயக் கல்லூரியில் சேர்த்து, அன்பும் அக்கரையும் காட்டிய ஆன்ஸ்லம் பாதிரியாருக்கு ப்ரூனோ, புன்னகை பூத்த முகம் படைத்த வாலிபனாகத் தெரிந்த போதிலும் அவன் உள்ளம் இத்தாலி நாட்டு வெசுவயல் எரிமலை போன்றது என்பது புரிந்துவிட்டது; அஞ்சினார். மடாலயத்தில் இருக்கும்போதே ப்ரூனோ ஒரு சிறு ஏடு தீட்டினான் --- வெசுவயல் கொஞ்சம் நெருப்பைக் காட்டிற்று ! பொறிகளைக் கண்ட ஆன்ஸ்லம் பாதிரியார்,