பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை

131


துக்குக்கொண்டுவந்து நிறுத்துவதுடன் சிந்திக்கவும் தூண்டுகிறது. அந்தச் சிந்தனையின் பலனாக அறிவுத் துறையிலே ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய பொருளாதார புரட்சியினால் மட்டும் புதுவாழ்வு கிடைத்துவிடாது என்று நம்புகிறோம். ஆழ்ந்த நம்பிக்கை இது. எனவே தான் நாம் மனிதன் அடிமைப்பட்ட காரணத்தையும் அந்த அடிமைத்தனம் எப்படி நீக்கப்படவேண்டும் என்பதையும் நமது பிரசாரத்திலே முக்கிப் பகுதியாக வைத்துக்சொண்டிருக்கிறோம்.

அவர்கள் பணி

மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியம் என்பதை உணர்ந்து ஐரோப்பா கண்டத்திலே பேரறிஞர்களான வால்டேர் ரூஸோ போன்றார் அறிவுத் துறைப் புரட்சிக்காக எவ்விதம் பணியாற்றினரோ அவ்விதமான பணியினையே நாம் புரிகிறோம்.

திராவிடனுடைய உழைப்பை மூன்று முனைகளிலிருந்து மூன்று சக்திகள் பறித்துக்கொள்கின்றன. ஆங்கிலேயன் ஆள்பவனானான். செல்வம் கொண்டு சென்றான்; ஆரியன் ஆலய வேந்தனானான், பொருளைத் தூக்கிச் சென்றான்; வடநாட்டான் வணிக வேந்தனானான். பொருளைச் சுமந்து செல்கிறான்; இவ்வளவுக்கும் இடமளித்த திராவிடன் எக்கதி அடைய முடியும்! தேம்புகிறான், திகைக்கிறான்.

நம் வளர்ச்சி !

தி. மு. கழகத்தின் இன்றைய வளர்ச்சி நம்முடைய நண்பர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது; நான் ஒன்று சொல்லிக் கொள்வேன்--எனக்கு இந்த வளர்ச்சி பெருமை-