பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

பொன் மொழிகள்


கல்யாணம்--அடுத்த தைக்குக் கல்யாணம் என்று சேர்த்து வைப்பதைப் போல், இங்கே கூடியிருக்கின்ற நீங்களும், இங்கே வர முடியாமலிருக்கின்ற மற்றவர்களும் சீமான்களல்ல என்பது எனக்குத் தெரியும்; நீங்களெல்லாம் கஷ்ட குடும்பத்திலே உள்ளவர்கள்--நான் உணர்ந்திருக்கின்றேன். நாமெல்லாம் நடுத்தரக் குடும்பத்தார்கள் --இதிலே ஒருவர்க்கொருவர் பெருமை பேசிக்கொள்ளத் தேவையில்லை; கஷ்ட ஜீவனத்தில் இருப்பவர்கள் -- ஆனாலும், ஏழை எப்படி தன் மகளுடைய திருமணத்திற்காகக் கொஞ்சம் கொஞ்சம் பணத்தை அவ்வப்போது சேர்த்துக்கொண்டு வருவானோ அதைப்போல், தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற தி. மு. கழக ஆதரவாளர்கள் தொழிலிலே கிடைக்கின்ற வருமானத்திலே ஒரு சிறு பகுதியையாவது தி. மு. கழக வளர்ச்சிக்கென்று -- தி.மு.கழகப் பொறுப்புக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டே வந்தாகவேண்டும்.

நீங்கள் அப்படிப்பட்ட விதத்திலே எங்களுக்குக் கை கொடுத்தால்தான் பெரிய வளர்ச்சியடைந்துவிட்ட பிறகு--வளர்ச்சி பெற்றுவிட்ட இந்த இயக்கம், அதன் வளர்ச்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், இலட்சியத்தை அடைய தற்கான முயற்சிகளை எடுத்துக்கொள்ளவும் பயமின்றி ஈடுபட முடியும் !

வாழ்வை வளைக்கும்

முதலாளி, தொழிலாளி என்ற பேதம் பொருள் சம்பந்தமானது, உடலை வறுத்தக்கூடியது. வாழ்வை வளைக் கக்கூடியது. ஆனால் ஆரியர் திராவிடர் என்ற பேதம் உயிரைக் கெடுக்கும். தற்கால வாழ்வையும் கெடுக்கும் தகைமை உடையதாக இருப்பதை ஆராய்வோர் காண்பர். ஆலைகளும் தொழிற்சாலைகளும் ஆங்காங்கு தோன்றினால்