பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

135


முதலாளி--தொழிலாளி என இரு வர்க்கம் பிரியக் காண்கிறோம். ஆனால் இந்த ஆரிய திராவிடர் என்ற வர்க்க பேதம் பிறக்கும்போதே இருக்கக் காண்கிறோம்

தொழிலாளி ஆரியராக முடியுமா?

தொழிலாளி முதலாளியாக மாற மார்க்கம் உண்டு. மாறின பலரைப் பலர் அறிவர். அதுபோலவே முதலாளி தொழிலாளியாக மாறினதைக் கண்டதுண்டு, ஆனால் ஆரியனாக முடியாது. படித்து, பணம் படைத்து, உயர் பதவி பெற்றிருப்பினும் அவன் உயர் ஜாதியென கொள்ளப்படுவதில்லை. ஆசார, அனுஷ்டானங்களும் அவனை ஆரியருடன் ஆரியராக அமரும் நிலையைத் தருவதில்லை. பிறவி முதலாளிகளாக உள்ள ஆரியர்களின் ஆதிக்கத்தை அகற்ற உணர்ச்சியும் ஆற்றலும் பெற்று, அந்த ஆதிக்கத்தை அகற்றிவிட்டால் பின்னர் பொருள் படைத்ததால் முதலாளியாகி, பொருளிழந்தால் தொழிலாளியாகி விடக் கூடிய கூட்டத்தின் ஆதிக்கத்தை அகற்றுவதென்பது மிக எளிதாகச் செய்து முடிக்கக்கூடிய காரியமாகும். பிறவியிலேயே இருப்பதாகக் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வு நீங்கும்படி செய்துவிட்டால் பிறவியின் காரணமாக கற்பிக்கப்படும் பேதங்களை போக்கிவிட்டால், பின்னர் பணம் காரணமாக கற்பிக்கப்படும் பேதங்கள் பஞ்செனப் பறக்கும் சமுதாய அபேதவாதம் நிலை நாட்டப்பட்டுவிட்டால் பொருளாதாரத் துறையில் அபேதவாதத்தைக் காணலாம். கஷ்டமான காரியமாகத் தோன்றாது. எனவேதான் முதலாளி தொழிலாளி என்ற பேதத்தைவிட மிக நீண்ட நாளையதும் நிரந்தரமானதாக இருப்பதும் வேத சாஸ்திர புராண. இதிகாச சம்மதம் பெற்றதெனப்படுவதும், மாறுதலுக்கு இடமே அளிக்காததுமான ஆரிய--திராவிட பேதம் மிக அவசர-