பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

பொன் மொழிகள்


கதிகலங்க அடித்தது. கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ என்னும் கிரேக்க தத்துவ ஞானியின் காலத்திலிருந்து கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்த மார்க்ஸ் காலத்திற்கு முன்வரை, மக்களின் நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளனைத்தும் நம்பிக்கையான முடிவை அளிக்கவில்லை. பெரும்பகுதி வெறும் சொல்லாராய்ச்சியாகவும், வேதாந்த விசாரணையாகவும், சமாதானத்தையளிக்காத சமரச கீதமாகவும், நாட்டுக்குதவாத, ஏட்டுரையாகவும் முடிந்தது.

இருட்டறையில் இன்னலுற்ற மக்கள் இன்பங்காண விழைந்த ஒவ்வொரு சமயமும் ஒடுக்கப்பட்டனர். ஆண்டை--அடிமை, உயர்ந்தவன்--தாழ்ந்தவன், மதகுரு--பக்தன். மிராசு--உழவன், பிரபு--பணியாள், முதலாளி--தொழிலாளி, இவர்களிடையே ஏற்பட்ட வர்க்கப் பேராட்டங்களே உலக வரலாறாகும்,

நம்பிக்கை ஒளி

இந்தப் போராட்டங்களின் வரலாற்றை நன்றாக அலசிப் பார்த்தவர் மார்க்ஸ். பிரபுக்கள்--முதலாளிகளின் கொடுங்கோன்மை வெகுநாளைக்கு நிலைக்காதென்பதையும், உழைப்பாளிகளின் முயற்சியால்தான் உழைப்பாளர் உலகு மலரும் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். அவருடைய தெளிந்த முடிவு ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை ஒன்று. சேர்த்தது. நலிவுற்ற உள்ளத்தை புலியுளமாக்கியது. கசங்கிய கண்கள் கனலைக் கக்கின. மேதினி விழித்தது. மேதினம் பூத்தது.

ஏழை என்றும் பணக்காரன் என்றும் இருவர்க்கம் இருப்பது பொதுவாகவே சமூகத்துக்குக் கேடு, ஆபத்து என்று எடுத்துக்கூறி, பாட்டாளியின் துயரைத் துடைக்கப்