பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பொன் மொழிகள்


அவர்கள் அறியவில்லை ஒடத்துக்கு அடியிலே ஏற்படும் ஓட்டைகளை!

ஏழை என்ற ஒரு சொல்லிலே அடங்கி இருக்கும் ஆபத்தை உணராமலேயே, சமூகத்தின் காவலர்கள் என்ற நிலை பெற்றவர்கள் தத்தம் காரியத்தையே கவனித்துக் கொண்டு போகின்றனர்.

ஏழை, இன்று அழுகிறான்! இன்னும் கொஞ்ச நாட்களில் அவன் கண்கள் வறண்டுவிடும். நீர் வராது.

ஏழை சிரிக்கப்போகிறான்! தன் சகாக்களின் தொகை பெருகியதுகண்டு பலரகமான ஏழைகள் இருப்பதுகண்டு; அதைக் கண்டு சீமான்கள், பயந்து பதுங்குவது கண்டு. ஊரெங்கும் ஏழை, பெருவாரியாக ஏழைகள், இடையே சிறு கூட்டம் செல்வவான்கள் என்றால் அதன் பொருள் என்ன? இன்று உணர மறுக்கின்றார்கள் உடைமைக்காரர்கள். பிரபுக்களைச் சூழ்ந்துகொண்டு பட்டினிப் பட்டாளம் நிற்கிறது என்றுதான் அதற்குப் பொருள். பிரபுவின் அலங்காரத்தை ஏழையின் அலங்கோலம் கேலிசெய்யும், பிரபுவின் பன்னீர் வாடையை ஏழ்மையின் துர்நாற்றம் இருக்கும் இடம் தெரியாமல் அடித்துவிடும் ! இல்லாதார் தொகை ஏறுகிறது.

இதன் உண்மையான கருத்து, சமூகம் எனும் மாளிகையின் சுற்றுச் சுவர் சரிகிறது என்பதுதான் ! பூந்தோட்டத்தை நோக்கிப் புயல் வருகிறது என்று பொருள்.

கடமை என்ன ?

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது முதலாளி இலாபம் குறைகிறது என்று குறை கூறுகிறான்.