பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி .என். அண்ணாதுரை

143


சார்க்கார் அமைதி கெடுகிறது என்று கூறுகிறது. தனம் படைத்த தலைவர்கள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்று பேசுகின்றனர். ஆனால் தொழிலாளர்களின் வீட்டிலே துயரம், பட்டினி சூழ்ந்து கொள்கிறது. இதனைக் கவனிக்க மனம் இல்லை. உரிமைக்காக உணவுக்காகப் போராடும் தொழிலாளியை லாபத்துக்காகப் பாடுபடும் முதலாளி அடக்கும்போது பொதுமக்கள் கடமை என்ன? தொழிலாளர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களின் உழைப்பே சமூகத்தின் உயிர் நாடி. அவர்களின் வேதனை நமது வேதனை.

உரிமை எது ?

மக்கள் தங்கள் உபயோகத்துக்காக விலை கொடுத்து வாங்கும் பண்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதிலே இருசாராருக்கு மிடையில் அதாவது முதலாளி, தொழிலாளி ஆகிய இருசாராருக்குயிடையே ஏற்படும் சச்சரவு இது -- நமது பணம்--நாம் கொடுத்த தொகை -- ஆகவே அது பற்றிய பிரிவினைத் தகராறு வருகிறபோது நமக்கும் அந்தப் பிரச்னையிலே சம்பந்தம்கொள்ள, அபிப்பிராயம் கூற, சிக்கலைப் போக்க முழு உரிமையிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் பொது மக்கள் மனதிலே. இரு சாரார் கூறும் வாதங்களில் யார் கூறுவது நியாயம் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும், சீர் தூக்கிப் பார்த்து நியாயம் என்று மனதிலே படுவதை தைரியமாக எடுத்துக் கூறவேண்டும். பண்டம் வாங்குபவன் நான், பணம் கொடுப்பவன் நான்.,நான் கொடுத்த பணத்தை யார் யார் எந்தெந்த அளவு எடுத்துக் கொள்வது என்று நியாயம் கூற நான் வருவேன். எனக்கு அந்த உரிமை உண்டு. ஏனெனில் எந்தப்