பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

பொன் மொழிகள்


பணத்தில் பங்கு விகிதத்துக்காக சச்சரவு வந்ததோ அந்தப் பணத்தைத் தந்தவனே நான் என்று கூறும் உரிமையை பொதுமக்கள் மறக்கக் கூடாது. இந்த உரிமையை பொது மக்கள் உணரவும் உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்கவும் முன்வருமாறு பொது மக்களை அழைக்கும் பணியினை திராவிடர் இயக்கம் செய்து வருகிறது.

மக்கள் மன்றம்

தொழிலாளருக்கும் பொது மக்களுக்குமிடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் அரிய காரியம் இது--அந்தக் காரியத்தைச் செய்ய வேறு கட்சிகளும் இல்லை. தொழிலாளர் கட்சி, முதலாளி கட்சி என்று இரண்டு கிளம்பி மோதிக் கொள்வதும் மோதுதலின் போது ஒழுங்கையும் சட்டத்தையும் அமைதியையும் நிலை நாட்டுவது எங்கள் கட்சி என்று கூறிக் கொண்டு சர்க்கார் கிளம்புவதுந்தான் காண்கிறோம், பொதுமக்கள் முன்பு கொண்டு வரப்படவேண்டய பிரச்னை இது என்பதும் கவனிக்கப்படுவதில்லை. பொது மக்கள் மன்றத்தின் முன்பு வழகுக்குரைத்து நீதி வழங்கும்படி கேட்கும் காரியத்தை திராவிடர் இயக்கம் செய்வதன் மூலம் பொது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துகிறது.

போரும் பொதுநலமும்

தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டுமே இருக்கும் நிலைமாறி அவன் தொழிற்சாலைகளிலே பங்காளியுமாக்கப்பட்டால் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.

பொதுநலம் பாட்டாளி ஆட்சியிலேதான் மலர முடியும். அந்த ஆட்சியின் வெற்றியினால் மட்டுமே