பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

பொன் மொழிகள்


வாதாட முன் வருபவர் யாரும், அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ கம்யூனிஸ்ட் ஆகித் தீரவேண்டும்--இல்லையேல் தொழிலாளர்களின் தோழமையை இழந்து தீரவேண்டி நேரிடும். போலிச் சங்கங்களை வைத்துக்கொண்டு, முதலாளிக்கு நண்பனாக இருந்துகொண்டு, தன் சுயநல சொக்கட்டான் ஆட்டத்துக்குத் தொழிலாளர்களைப் "பாய்ச்சிகை "யாக்கி கொள்ளலாம் என்ற முறையில் சிலர் கிளம்பினாலும் கொஞ்ச நாளே அந்தக் கூத்து நடைபெற்ற பிறகு கொட்டகை காலியாகும்.

மனித உரிமையான ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களான கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கிளர்ச்சியுரிமை ஆகியவற்றோடு தொழிலாளருக்கு வேலை நிறுத்த உரிமையும் நிச்சயம் தேவை. ஆனால் அது இரு பக்கம் கூர் உள்ளது. அந்த சக்தியைப் பெறுவதற்காக எண்ணற்ற தொழிலாளர்கள் தங்கள் ரத்தத்தைச் சிந்தியுள்ளனர்.

கூலி உயர்வு ஏன் ?

கோடி கோடியாக இலாபமடித்த முதலாளியை, நாடி நரம்பு முறியப்பாடுபடும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்கிறார்கள் என்றால் தொழிலாளர்கள் தங்கள் மாளிகையிலே உள்ள மூன்றாவது மாடிக்குப் பளிங்குக் கல் அமைக்கப் பணம் கேட்கவில்லை. குடிசையில் படுத்து உறங்கும் போது பசியால் சிறுகுடலைப் பெருங்குடல் தின்றுவிடாதபடி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே கூலி கொஞ்சம் கூட்டிக் கொடுக்கும்படி கேட்கிறார்கள்.

தொழிலாளர் வாழ்க்கையிலே இப்படி வறுமைத் தேள் கொட்டும்படி செய்துவிட்டுப் பிறகு அவர்கள்