பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

149


கட்டுக்கு அடங்குவதில்லை, வேலை நிறுத்தம் செய்து தொழில் பெருக்கத்தை கெடுக்கிறார்கள்--கலவரம் செய்கிறார்கள்--என்று குறை கூறுவதும் சரியாகுமா?

எங்கும் கிளர்ச்சி

ஆலைத் தோழர்கள் முதற்கொண்டு அரசாங்க உத்தியோகஸ்தர் வரையிலே சம்பள உயர்வுக்காகவும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் தமக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கிளர்ச்சி செய்து, கஷ்ட நஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு, சிற்சில சமயங்களில் தோல்வி அடைந்தபோதிலும், பொதுவாக ஓரளவு வெற்றி பெற்று வருகிறார்கள். பொருளாதார முறையிலே காணப்படும் பேதத்தின் பலனாக, உத்தியோக மண்டலங்களில் ஒருசிலர் உச்சியில் அமர்ந்துகொண்டு, கொழுத்த சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை அமுலுக்குக் கொண்டுவர உழைக்கும் எண்ணற்ற சிறு உத்தியோகஸ்தர்கள், குறைந்த சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, குடும்ப பாரம் தாங்கமாட்டாமல் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.

வேலை நிறுத்தம்

எவ்வளவோ நாட்களுக்கு சகித்துக்கொண்டிருந்து விட்டு தொல்லை தாங்கமுடியாமல் போய்விட்டதால், கெஞ்சிப் பயன் ஏற்படாமல் போனதால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை துவக்கியிருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். எவ்வளவு பொறுக்க முடியுமோ அவ்வளவையும் பொறுத்துப் பார்த்து கடைசியில் 'வருகிற கஷ்டம் வரட்டும், அனுபவிப்போம். வேலை நிறுத்தம் செய்தே தீரவேண்டும்' என்று தீர்மானிக்-