பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என் அண்ணாதுரை

15


திராட்சைகள் நிரம்பிய கொல்லையைக் காண்கிறான். எங்கும் தெரியும் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டிருக்கிறான்.

"மகனே! மகனே! வர இருக்கும் ஆபத்து அறியாமல் கிடக்கிறாயே!" என்று கூறியவண்ணம் வந்த ஆன்ஸ்லம் பாதிரியார், மடாலய ஏற்பாட்டைக் கூறினார்--நடுங்கும் குரலில்.

"நான் அறிவேன்! நான் அறிவேன்! விசாரணை என்றால் என்ன என்பதை நான் அறிவேனடா ஜியார்டானோ" என்று வேதனை ததும்பும் குரலில் அவர் கூறியபோது ரூனோ."அஞ்சாதீர் ஐயனே! அஞ்சாதீர்! என்பொருட்டு அஞ்சாதீர்! ஏனெனில் என் பொருட்டு நானே அஞ்சவில்லை!" என்று கூறினான்!

அந்தப் ப்ருனோ இப்போது தணலில் போட்டு எடுக்கப்பட்ட தங்கமாகிவிட்டிருக்கிறான். ஆபத்தெனும் அகழிகளைத் தாண்டியிருக்கிறான். கொடுமையூர்களைக் கடந்திருக்கிறான். வெறுப்பு வெப்பத்திலே மூழ்கி எழுந்திருந்து இருக்கிறான் இப்போதா அஞ்சப்போகிறான்! மானைக் கொல்லக் குதித்த சிங்கக்குட்டி, பெரும் பிடரிபடைத்த காட்டரசனான பிறகு மத்தகத்தை அல்லவா பிளக்கும்-- முயற் கூட்டம் கண்டா ஓடி ஒளியும்? நீலநிற வானத்தையும், பச்சைப் பசேலென்ற தோட்டத்தையும் கண்டதும் பரவசப்படும் வாலிபன், என்னைப்பற்றி நான் அஞ்சவில்லை" என்று சொன்னான் என்றால். இப்போது அந்த நெஞ்சு உரம், எதிரியின் உறுதியை முறியடிக்கும் வகையினதாகத்தானே ஆகிவிட்டிருக்கும். இடைக்காலத்திலே அவன் சுகத்துக்கும் சுய கலத்துக்கும் பலியாகிவிட்டிருந்தால், கோழைத்தனம்