பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

பொன் மொழிகள்


கிறார்கள். வேலை நிறுத்தம் என்று தீர்மானித்தவுடனே தொழிலாளர்களின் மனக்கண் முன் ஆத்திரமடைந்த முதலாளி, சீறிடும் சர்க்கார், சட்டத்துக்காக தடியடி தர முன்வரும் அதிகாரவர்க்கம் ஆகியவர்கள் தோன்றாமலில்லை. பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், கலகங்கள், தடியடி, சிறைப்படுதல் போன்ற காட்சிகள் அவர்கள் மணக்கண் முன் தோன்றாமலுமில்லை. அணைந்த அடுப்பு, அழுகின்ற மனைவி, அலைகின்ற குழந்தைகள் இந்தச் காட்சிகளும் தெரிந்தும் வேலைநிறுத்தம் செய்கின்றார்கள்!

வீம்பு போராட்டமல்ல

வேலை நிறுத்தம் தொழிலாளியின் வீம்பு போராட்டமல்ல--ரத்தக் கண்ணீர் ! அவன் வேதனைப் புயல் ! விம்முதலின் எதிரொலி ! வீட்டுக்குள்ளே சென்றால் பசிவேதனை, வெளியே சென்றால் அடக்குமுறை அச்சம். வீட்டுக்குள்ளே தரித்திரம், வெளியே அடக்குமுறை தர்பார் என்ற நிலை நாட்டில் ! எனவே நெருப்போடு விளையாட தொழிலாளி பொறுப்பற்றவனல்ல. முதலாளியின் முகத்திலே இருக்கும் ஜொலிப்பும் தொழிலாளியின் வாழ்க்கையிலே காணப்படும் தவிப்பும் கண்டால் போதும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணர.

அந்த சக்தி

முன்பெல்லாம் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தால், வேலை நிறுத்தம் ஏற்பட்டால், சட்டம் சமாதானம் ஒழுங்கு அமைதி என்ற காரணம் கூறிக்கொண்டு, அதிகார வர்க்கம் அமுல் நடத்தும், 144 செக்ஷன் பிறக்கும். தடியடி துப்பாக்கிப் பிரயோகம், சிறை முதலியன நடைபெறும். தொழலாளர்கள் இவ்வளவு தாக்குதல்தளை சமாளித்தாக