பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

151


வேண்டும்--முடிந்தது. வெற்றிகரமாகவே முன்னேறிச் சென்றனர். அவர்கள் மீது சட்டம் சீறியபோது, அடக்கு முறை வீசப்பட்டபோது, அவர்களிடம் அன்பு காட்டவும் ஆதரவு தரவும் அவர்களுக்காகப் பரிந்து பேசவும் பொதுமக்கள் முன்வந்தனர். எனவே அந்த பலத்தைத் துணைக்கொண்டு. அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தொழிலாளர்களுக்கு இருந்தது. பட்டினிக் கொடுஞ்சிறையில் இருக்க முடியாது என்று பரணி பாடிக்கொண்டு எழுந்தனர் பாட்டாளி மக்கள். ஆதரவு திரட்டித்தந்தனர்--அனுதாபப்பட்டனர்.

இரட்டைக்குழல் துப்பாக்கி

கத்தி வீச்சைத் தடுக்கக் கேடயம் இருந்தது ! குண்டு பாய்ந்து செல்ல முடியாத கவசம் கிடைத்தது. போரிடுவதற்குத் தேவையான ஆர்வம் தருவதற்கு வீரரசம் தரப்பட்டது. எனவே அவர்களால், தாக்குதல்களைச் சமாளிக்க முடியும். இப்போது நிலைமை வேறு. மாறிவிட்டது விபரீதமான முறையில், வேதனையான விளைவுகள் ஏற்படும் முறையிலே. இப்பொழுது தொழிலாளர்கள்மீது இரட்டைக்குழல் துப்பாக்கி நீட்டப்படுகிறது. தொழிலாளர் இருதயத்தின்மீது.

அன்றும் இன்றும்

தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஒரு பக்கமும் பிரச்சாரம் மறுபக்கமும் வீசப்படுகிறது. அதாவது அடக்கு முறை சக்தி, அறிவிக்கும் சக்தி இரண்டும் கொண்டு சர்க்கார் தாக்கத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் இந்த இரட்டைக்குழல் துப்பாக்கி கிடையாது, போலீசைக்கொண்டு அடக்குவர் பாட்டாளிகளின் கிளர்ச்சியை.