பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

பொன் மொழிகள்


ஆனால் உடனே பிரச்சார பீரங்கிகள் முழங்கத் தொடங்கும் ஆட்சியாளரை நோக்கி. இந்த வசதி இன்று தொழிலாளருக்கு இல்லை. இப்போது இரண்டு வகையான ஆயு தங்களும், போலீஸ் பிரசாரம் இரண்டும், ஒரே கரத்தில் உள்ளன.

நாஜிசப் பாதையில்

இத்தகைய இரட்டைக் குழல் துப்பாக்கியின் துணை கொண்டு நடத்தப்படும் ஆட்சிக்குத்தான், நாஜிசம் என்று பெயர் ! அதன் தாக்குதலை பாட்டாளி உலகு தாங்க வேண்டும்--நிச்சயமாகத் தாங்கமுடியும் என்று மட்டுமல்ல இறுதியில் இரட்டைக்குழல் துப்பாக்கியின் குண்டுகள் தீர்ந்துபோய் களத்திலே அதனைப் போட்டுவிட்டு ஓடுமளவுக்கு நாஜிசத்தைப் பாட்டாளி வர்க்கம் முறியடிக்கத்தான் போகிறது.

பிரச்சாரபலம், அதிகாரபலம் இரண்டும் இருக்கும் காரணத்தாலேதான் வேலை நிறுத்தங்கள் ஒவ்வொன்றின் போதும் ஆளவந்தார்கள் முதலாளிகளின் முன்னோடும் பிள்ளைகளாகி பாட்டாளி மக்களை அடக்குகிறார்கள். தொழிலாளிக்குத் தடியடி, கண்ணீர் குண்டு, துப்பாக்கிப் பிரயோகம் சகலமும் நடக்கிறது. ஜனநாயக உணர்ச்சியை அடக்குமுறை கொண்டு ஒழித்துவிட முடியாது. அந்த ஜனநாயக உணர்ச்சி ஏற்படவேண்டுமானால். பலப்பட வேண்டுமானால், நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் வேண்டும். பழைமையின் பிடிப்பிலிருந்து விலகும் நோக்கம் இருக்கவேண்டும்.

முற்றும்