பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

எட்டு நாட்கள்


தோழமை கொண்டுவிட்டிருக்கும். அன்று மடாலயத்திலிருந்து தப்பி ஓடிவந்த ப்ரூனோ தன் அறப்போரை நிறுத்திய பாடில்லை--பயணத்தை முடித்துக்கொண்டானில்லை !

நெஞ்சு உரம், ப்ரூனோவுக்கு சிறுவயது முதல் இருந்து வந்த பெருந்துணை. அதை எட்டாண்டு சிறை கெடுக்கவில்லை. இன்னும் இருப்பது எட்டே நாட்கள்! நெஞ்சு உரம் குலைக்கப்படும் என்று எண்ணினவர்கள், ப்ரூனோவின் குணம் அறியாதவர்கள் !

கோழைகளை அவர்கள் மிரட்டிப் பணியவைத்திருக்கிறார்கள்.

கொடுமைகளை ஓரளவுக்குமேல் அனுபவிக்க முடியாத வலுவற்றவர்களை அவர்கள் அடிபணியவைத்திருக்கின்றனர்.

ஆசைக்கு ஆட்படுபவர்களை அவர்கள் பாசவலையில் விழச்செய்திருக்கிறார்கள்.

ப்ரூனோ, இந்தக் கயவர் வலையிலே சிக்க மறுக்கும் வீரன் !

சரண்புகுந்தால், ப்ரூனோ போன்ற கற்றறிவாளனுக்கு வைதீகபுரியில், எந்தக் காணிக்கையும் பெறத்தக்க குருபீடம் கிடைத்திருக்கும். காரணம் கேளாது, பொருள் அறிய முயற்சிக்காது, ஆபாசம் என்று தோன்றினாலும் அதற்கு ஏதேனும் உட்பொருள் இருக்கும் என்று நம்பிக் கொண்டு, மத ஏடுகளை மனப்பாடம்செய்து, அவ்வப்போது சிறிது சிறிது கக்கிவிட்டு, அதனை அருள்வாக்கு என்று எண்ணும் ஏமாளிகளிடம், பொன்னும் புகழும். பூஜையும் தொழுகையும் பெற்றுக்கொண்டு, முடியுடை மன்னரையும் த்ன் பிடியிலே வைத்துக்கொண்டு, தம்பிரா-