பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

17


னாக--சன்னிதானமாக. வாழ்ந்து வந்தனர் பலர்--அறிவுத் தெளிவிலே, ப்ரூனோவிடம் நெருங்கவே முடியாத குறை மதியினர்! ப்ரூனோ, கற்றறிவாளன்! அவன் சொற்பொழிவு. கரும்பென இனிக்கும் தரத்தது: எத்தகைய கடினமான பொருளையும் அவன் எளிதாக்கிடும் வண்ணம் பாடம் கூறவல்ல பேராசிரியன்; சலிப்பளிக்கும் தத்துவத்தையும், தேனாக்கித்தரும் தெளிவுரை கூறவல்லான்; பாரிசிலும், இலண்டனிலும், பதுவாவிலும், வட்டன்பர்க்கிலும், அவனிடம் பாடம்கேட்க வந்த வாலிபர்கள், சொக்கி நின்றனர்; எந்தப் பேராசிரியனுக்கும் கிடைக்காத பெரும்புகழ் அவனைத் தேடிவந்தது! அத்தகைய ப்ரூனோ, ஒருகணம், சபலத்துக்கு ஆட்பட்டு, ஆசைக்கு அடிமைப் பட்டு, ரோம் நகரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் போப்பாண்டவருக்குச் சரணம், என்று கூறிவிட்டிருந்தால் போதும், தேவாலயக் கதவுகள் திறந்து இருக்கும். அருளாலயங்களிலே குவிந்து கிடந்த செல்வத்திலே புரளலாம், அரசர்கள் அஞ்சலிசெய்வர்! நடவடிக்கையைப் பற்றிக் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை; பக்தர்கள், பாதிரிகளின் உபதேசத்தின் சுவையைத்தான் தரம் பார்ப்பார் களே தவிர. நடவடிக்கையைப்பற்றித் துளியும் கவலை கொள்ளமாட்டார்கள்: நாற்றம் வெளியே தெரியாமலிருக்கும் பக்குவம் அறிந்திருந்தால் போதும். உபதேசம் செய்வதிலே, உருக்கம் இருந்தால் போதும், நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதுகூட வேண்டப்படுவதில்லை. ஒரு பெரிய மத அதிபர், "ஏசுநாதர் பற்றிக் கட்டிவிடப்பட்டுள்ள சுவையானகதை, எவ்வளவு சுகபோகத்தையும் செல்வத்தையும் நமக்கு அளிக்கிறது!" என்று கூறிப் பூரித்தாராம் ! அப்படிப்பட்ட காலம் அது. ஜியார்டானோ ப்ரூனோ இசைந்திருந்தால் போதும், குருபீடம் கிடைத்திருக்கும்.


எ - 2