பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

19


ப்ரூனோவுக்கு, பல்கலைக்கழத்தைப் பாசறைகளாக்கி, மாணவர்களை அறிவுத்துறை வீரர்களாக்கி குருட்டறிவை விரட்டும் போரிடவேண்டும் என்பதுதான், குறிக்கோள். இத்தாலியில், குருட்டறிவு, அரசமார்க்கமாகிவிட்டிருந்தது: இருட்டறையில் தள்ளி இம்சிக்கும், அருளாளர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது; எனவேதான், ஓடி வந்துவிட்டார், பாரிஸ் பல்கலைக் கழகம், பிரான்சு நாட்டிலே புதிய புகழ்பெற்று வருகிறது ! புதுமைக் கருத்துகளை வரவேற்கும் கூடமாக அது விளங்கிற்று. பழமைக்குப் பாசறையாக, சோர்போன் பல்கலைக் கழகமும், புதுமைக்குப் புகலிடமாக பாரிஸ் பல்கலைக் கழகமும் விளங்கின. ப்ருனோவுக்கு, உண்மையிலேயே பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியாற்றுவதிலே பெரு மகிழ்ச்சி--எதிர்பார்த்த இன்பம் கிடைக்கிறது என்று தான் பொருள்.

மன்னன், மகிழ்வூட்டும் செய்தியைக் கூறியதும், ப்ரூனோ,விரும்பிய வாய்ப்புக் கிடைத்தது என்று எண்ணிக் களித்தார். ஆனால், பேரிடி உடனே வந்தது.

பல்கலைக் கழகத்தில் பணியாற்றுவதற்கு ஒரு நிபங்தனை உண்டு; மன்னர் அதனைக் கூறினார். கூறுமுன் கேட்டார், ப்ரூனோ! ஏன், தேவாலயத் தொழுகைகளிலே நீர் கலந்துகொள்வதே இல்லை?" என்று. கேட்டுவிட்டுச் சொன்னார். 'பல்கலைக் கழக ஆசிரியர் என்ற முறையில், நீர் கக்தோலிக்க முறைப்படி உள்ள தொழுகை நடத்த வேண்டும் தேவாலயத்தில்"

"என்ன சொல்கிறீர், மன்னா! தொழுகையா? பேராசிரியர் வேலைக்கு அது நிபந்தனையா?" என்று கேட்கிறார். ப்ரூனோ; அச்சம் தலைகாட்டுகிறது.