பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

எட்டு நாட்கள்


"ஆமாம்! ஆசிரியரைப் பார்த்துத்தானே மாணவர்கள் நடந்துகொள்வர்; தொழுகை முக்கியம் " என்றார் மன்னர்--இதில் என்ன இடையூறு என்று எண்ணிய வண்ணம்.

மகிழ்ச்சி கருகலாயிற்று, விசாரம் கொண்டார், ப்ரூனோ.

"தத்துவம், நான் போதிக்கப்போவது; மதமல்ல; தொழுகைக்கு நான் சென்றாக வேண்டுமென்று நிபந்தனை ஏன், மன்னா !" என்று கேட்கிறார்.

"வீணான குழப்பம்! தொழுகை சடுதியில் முடிந்து விடும், ப்ரூனோ ! காலம் வீணாகுமே என்று கவலையோ" என்று மன்னர் வேடிக்கையாகவே பேசுகிறார்.

"முடியாது. வேந்தே!"

"முடியாதா? தொழுகையா?"

"ஆமாம். அரசே! நான் தொழுகை செய்து நீண்ட காலமாகிவிட்டது"

"தொழுகை. கத்தோலிக்கரின் ப்ரூனோ! தவிர்க்கக்கூடாத கடமை நீங்காக் கடமை"

"நான் கத்தோலிக்கனல்ல, காவலா! கத்தோலிக்கனல்ல !"

"மெள்ளப் பேசு. ப்ரூனோ மெள்ளப் பேசு. கத்தோலிக்க மதமல்லவா நீ! எவ்வளவு வேதனை! அப்படியானால். லூதர் கூட்டத்தவனோ?"

"இல்லை, அரசே!"