பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

21


"கால்வின் கூட்டமோ?".

"அதுவுமல்ல ! அரசே ! நான் கத்தோலிக்கனுமல்ல, லூதர், கால்வின் ஆகியோர் முறையினனுமல்ல: நான் ஒரு தத்துவாசிரியன்; நெடுநாட்களுக்கு முன்பு நான் டாமினிகன் பாதிரியாக இருந்தேன் மடாலயத்திலே பயின்றேன்: அங்கு நான் அறிந்துகொண்ட உண்மைகள் என்னை எம்மதத்திலும் இருக்கவிடவில்லை"

"மதமற்றவனா! அப்படியானால்..... ப்ரூனோ!........ நீ நாத்திகன் ...அல்லவா...... எவ்வளவு வேதனை....என் ப்ரூனோவா இப்படி......"

"அரசே! நான் ஒரு தத்துவ ஆசிரியன்; அவ்வளவு தான்"

பாரிஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் வேலையை, உதறித் தள்ளிவிட்டார் ப்ரூனோ .

தன்னிடம் அன்பு காட்டிய மன்னன் கூறியும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசமறுத்த 'உத்தமன்' ப்ரூனோ! துளியாவது அச்சம் மனதிலிருந்தால், அரசனிடம் இவ்விதம் பேசுவதா என்று எண்ணத் தோன்றியிருக்கும். சிறிதளவாவது. ஆசைக்குக் கட்டுப்படும் சுயநலம் இருந்திருந்தால் தொழுகைதானே! என்று கூறிவிட்டு, பேராசிரியராகி இருக்கமுடியும்! ஆனால், ப்ரூனோவின், இயல்பு அவ்வளவு உயர்தரமானது ! ஆசைக்கு ஆட்பட்டு, பொய் யொழுக்கம் கொள்ள மறுக்கும் தூய்மையாளர் அவர்.

அவருக்கா, சிறையிலே, ஆசை பிறக்கும்? எட்டு நாட்களா? இதுபோல, ஆசையூட்டும் சம்பவங்களை அவர், பல கண்டிருக்கிறார். எல்லாவற்றையும் வென்றிருக்கிறார்.